மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நிறை மாத கர்ப்பிணியாக இருந்த போதிலும், கொரோனாவிற்காக சாதனை செய்த பெண் மருத்துவர்! நெகிழ்ச்சி சம்பவம்!
சீனாவின் உகான் நகரை பிறப்பிடமாக கொண்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவிவருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனவை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கி உள்ளனர். கொரோனாவை தடுக்க உலக நாடுகள் முழுவதும் மருந்து கண்டுபிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தியாவில், மகாராஷ்டிர மாநிலம் புணேவைச் சேர்ந்த, 'மைலேப் டிஸ்கவரி' என்ற நிறுவனம், கரோனா வைரஸை குறைந்த செலவில் கண்டுபிடிக்கும் பரிசோதனை கருவியைக் கண்டுபிடித்து வழங்கி உள்ளது. இந்தக் கண்டுபிடிப்புக்குப் பின்னால் நிறைமாத கர்ப்பிணியின் தீவிர உழைப்பு இருப்பது இந்திய மக்களின் அனைவரது மனதையும் நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
அந்த நிறைமாத கர்ப்பிணி தான் "மினால் தக்வே போஸ்லே". வைரலாஜிஸ்ட்டான இவர் கடந்த 5 ஆண்டுகளாக வைரஸ் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவத் தொடங்கியவுடன், பரிசோதனை கருவி கண்டுபிடிக்க மைலேப் டிஸ்கவரி நிறுவனம் ஒரு ஆய்வுக் குழுவை ஏற்படுத்தி உள்ளது. அந்தக் குழுவின் தலைவர்தான் மினால் தக்வே போஸ்லே. அந்த ஆராய்ச்சியின்போது அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரிசோதனை கருவி கண்டுபிடிக்க 3 அல்லது 4 மாதங்கள் ஆகும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், மீனால் அவர்களின் அயராது உழைப்பினால் ஆறே வாரங்களில் அந்த கருவியை கண்டுபிடித்து ஒப்படைத்துள்ளனர்.
இதுகுறித்து மினால் கூறுகையில் எனக்கு இந்த சமயத்தில் இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும் என்ற சூழ்நிலை போலிருந்தது என கூறினார்.
பரிசோதனை கருவியை கண்டுபிடிக்க வேண்டும், குழந்தை பிறப்பு ஆகிய 2 விஷயங்களும் ஒரே நேரத்தில் நடந்தன. அந்த இரண்டிலும் சவால்கள் இல்லாமல் இல்லை. அறுவை சிகிச்சை மூலம்தான் குழந்தை பிறந்தது என தெரிவித்தார். தற்போது மருத்துவர் மிலன் அவர்களை இந்திய மக்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.