#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பெட்ரோல், டீசல் விலை உயர்வு... திருமண ஊர்வலத்தில் சைக்கிளில் சென்ற புதுமண ஜோடி...
ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் பகுதியை சேர்ந்தவர் சுப்ரான்சு சமால். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. சுப்ரான்சு சமால் எப்போதும் எதை செய்தாலும் சற்று வித்தியாசமாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்.
தற்போது அவரின் திருமண நிகழ்வில் புதுவிதமான முயற்சியை மேற்கொண்டுள்ளார். அதாவது தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் விலை உயர்வுக்கு எதிராக அரசு நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்க அவர் முடிவு செய்தார்.
அதனையடுத்து திருமண ஊர்வலத்தில் மணமகளுடன் சைக்கிளில் சென்று திருமணம் செய்து கொள்வது என்று முடிவு செய்தார். மேலும் திருமண ஊர்வலத்துக்கு வருபவர்களும் சைக்கிளை பயன்படுத்த வேண்டும் என்று விரும்பினார். அதற்கு அவரது நண்பரகள் மற்றும் உறவினர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து திட்டமிட்டபடி திருமண ஊர்வலத்தில் பங்கேற்ற அனைவருமே சைக்கிளில் சென்றனர். மணமகனும் சைக்கிளில் மணமகளுடன் ஊர்வலமாக சென்று திருமணம் செய்தார். இது அந்த பகுதி மக்களை வியக்க வைத்தது.