#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நடுக்காட்டில் தோழியை பலாத்காரம் செய்த இளைஞர்கள்: நண்பர்களை நம்பி மானத்தை பறிகொடுத்த இளம்பெண்..!
அரியானா மாநிலம், ரிவாரி மாவட்டத்தில் உள்ள பாவல் பகுதியில் ராணுவ தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தும் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 19 வயதான இளம்பெண் ஒருவர் பயிற்சி பெற்று வருகிறார். இதற்கிடையே, அந்த பயிற்சி மையத்தில் ஜிந்தர், ரதிஷம், நீரஜ் ஆகிய 3 இளைஞர்கள் சேர்ந்துள்ளனர்.
இந்த நிலையில், அந்த இளைஞர்களுக்கும் இளம்பெண்ணுக்கும் பயிற்சி வகுப்பில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அவர்களுக்குள் நெருக்கம் கூடியதால் அவர்கள் நெருங்கிய நண்பர்களாயினர். இந்த நிலையில், கடந்த 3 வாரங்களுக்கு முன்பு கவ்ஷாலா என்ற பகுதியில் உள்ள காட்டை சுற்றி பார்க்கலாம் என்று கூறி 3 பேரும் அந்த இளம்பெண்ணை அழைத்து சென்றுள்ளனர்.
பின்னர் காட்டின் உட்பகுதிக்கு சென்றதும், அங்கு அந்த இளம்பெண்ணை 3 பேரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது குறித்து யாரிடமாவது தெரிவித்தால் குடும்பத்தினரை கொலை செய்துவிடுவோம் என அவர்கள் மிரட்டியுள்ளனர். இதனால், நடந்த சம்பவம் குறித்து பாதிக்கபப்ட்ட இளம்பெண் யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார். கடந்த திங்கட்கிழமை தன்னை பார்க்க வந்த குடும்பத்தினரிடம், தனக்கு நடந்த கொடூரம் குறித்து அந்த பெண் தெரிவித்துள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சம்பவம் குறித்து 3 இளைஞர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதால் ஜிந்தர், ரதிஷம், நீரஜ் ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்து பரிசோதனை செய்ததில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியானது. இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.