மழையின் போது ஏ.சி. பயன்படுத்தலாமா?.. இடி-மின்னல் ஏசியை பாதிக்காதா?.. உண்மை இதுதான்.!



Air Condition Usage During Rain and Lightning 

 

இன்றளவில் பலரின் வீடுகளிலும் ஏசி என்பது மிகவும் பிரதான பொருளாக பயன்பட்டு வருகிறது. எப்போதும் அறையில் குளுகுளு தன்மையை வழங்கவும், வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபடவும் மக்கள் அதனை பயன்படுத்த தொடங்கி விட்டனர். 

ஏசியன் பயன்பாடு எப்போதும் உபயோகத்தில் இருந்தாலும், ஒரு சிலர் மழை பெய்யும் போது கூட ஏசியை உபயோகம் செய்து வருகின்றனர். இவ்வாறான சமயத்தில் இடி-மின்னல் காரணமாக மின்வெட்டு தொடர்பான பிரச்சனையும் ஏற்பட வாய்ப்புள்ளது. 

Latest news

இதனால் மழை பெய்யும் நேரங்களில் சிறிது நேரம் ஏசி பயன்படுத்துவதை தவிர்த்து விட்டு அமைதியாக இருப்பதே ஏசிக்கு நல்லது. கனமழையின் போது ஏற்படும் மின்னல் காரணமாக, நமது மின்சாதன பொருட்களில் ஒன்றான ஏ.சி-யும் பாதிப்படைய வாய்ப்புள்ளது. இதனால் மழையின் போது ஏ.சியை உபயோகம் செய்யாமல் இருக்கலாம்.