மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சருமத்தை பொலிவாக்கும் கற்றாழை சுவீட்.. வீட்டிலேயே செய்வது எப்படி?..!
சருமத்தைப் பொலிவாக்க அனைவரும் விரும்பும் வகையில் சுவையான கற்றாழை ஸ்வீட் எவ்வாறு செய்யலாம் என்பதைப் பற்றி தற்போது காண்போம்.
கற்றாழையை முகத்தில் தடவுவதைவிட மருந்தாக சாப்பிடும் போது, சரும பிரச்சினைகள் அனைத்தும் உடனடியாக அகன்று விடும். அத்துடன் வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் செரிமான கோளாறு போன்ற பிரச்சனைகளுக்கு இது அமைகிறது.
தேவையான பொருட்கள் :
ஏலக்காய் -4
நெய் -3 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை -5 டேபிள்ஸ்பூன்
பால் -1 லிட்டர்
பாலிலிருந்து தயாரிக்கப்பட்ட கிரீம் - 4 டேபிள்ஸ்பூன்
பாதாம், பிஸ்தா -2 டேபிள் ஸ்பூன்
தோல்நீக்கி அலசப்பட்ட கற்றாழை ஜெல் -4 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
★முதலில் ஒரு கிண்ணத்தில் சர்க்கரையை கொட்டி, அது பொன்னிறமாக மாறும்வரை அடுப்பில் வைத்து பாகுபதத்தில் காய்ச்ச வேண்டும்.
★பின் ஒரு அடி கனமான பாத்திரத்தில் ஒரு லிட்டர் பாலை, அரை லிட்டராக சுண்டும் வரை மிதமான தீயில் நன்கு காய்ச்ச வேண்டும். அதனுடன் கற்றாழை போட்டு 10 நிமிடங்கள் கிளற வேண்டும்.
★அடுத்து இந்த கலவையை கிரீம் பதத்திற்கு வரும் வரை கிளறி, பின் அதனுடன் பாலில் தயாரிக்கப்பட்ட கிரீம் சேர்க்க வேண்டும். அப்போது பால் லேசாக பொன்னிறமாக மாற தொடங்கும் நிலையில், சர்க்கரை மற்றும் ஏலக்காய் தூளை சேர்க்க வேண்டும்.
★பின் இந்த கலவையை ஒரு அகன்ற பாத்திரத்தில், ஒரு கப் நெய் சேர்த்து கொட்டி ஆற வைக்க வேண்டும்.
★இவை ஆறியபின் உங்களுக்கு பிடித்த வடிவங்களில் வெட்டி, அதன் மேல் பிஸ்தாவை போட்டு குளிர்சாதன பெட்டியில் ஒரு மணி நேரம் வைத்து உண்டால், சூப்பரான கற்றாழை ஸ்வீட் ரெடியாகி விடும்.