"அய்யோ திருமணமா.?! எப்பவுமே இல்ல" பொன்னியின் செல்வன் நடிகை.. பகீர் அறிவிப்பு.!
ஆஹா!! அற்புதம்!! சர்க்கரை நோயாளிகளே உங்களுக்கு ஒரு குட் நியூஸ்!! இனி இதனை நினைத்து கவலைப்பட தேவை இல்லை.. வருகிறது புது தொழில்நுட்பம்
இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு மற்றும் ஆல்கஹாலின் அளவை அறிய உதவும் வாட்சுகளை ஆப்பிள் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இன்றில் நம்மில் பலருக்கும் இருக்கும் பொதுவான வியாதிகளில் ஒன்றாகிவிட்டது சர்க்கரை மற்றும் இரத்தக்கொதிப்பு. சர்க்கரை மற்றும் இரத்த கொதிப்பு அளவுகளை அறிந்துகொண்டு அதற்கேற்றாற்போல் நமது வாழ்க்கை முறையை மாற்றினாலே பெரிய ஆபத்துகளில் இருந்து நம்மை தர்கார்த்துக்கொள்ளமுடியும்.
ஆனால் ஆய்வகங்களுக்கு சென்று பரிசோதனை செய்துகொள்ளாமல் விடுவது, வீட்டில் இருந்துகூட எளியமுறையில் இரத்த சர்க்கரை அளவை தெரிந்துகொள்ளாமல் இருப்பது போன்ற காரணங்களால் ஒரு கட்டத்தில் நமக்கு தெரியாமளையே சர்க்கரை, இரத்த கொதிப்பின் அளவு அதிகரித்து பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது.
இந்நிலையில் இதற்கு ஒரு தீர்வை விரைவில் கொண்டுவர இருக்கிறது ஆப்பிள் நிறுவனம். அமெரிக்க மருத்துவ தொழில்நுட்ப நிறுவனமான ராக்லி போட்டோனிக்ஸ் (Rockley Photonics) என்ற நிறுவனத்திடம் இருந்து ஆப்பிள் நிறுவனம் புது தொழில்நுட்பம் ஒன்றை வாங்க உள்ளது.
இந்த தொழில்நுட்பத்தை ஆப்பிள் வாட்ச்சுகளாக மாற்றி, அந்த வாட்சினை நமது கைகளில் அணிந்துகொண்டால் நமது இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு, இரத்த கொதிப்பின் அளவு மற்றும் உடலில் உள்ள ஆல்கஹாலின் அளவு போன்றவற்றை இந்த வாட்ச் எளிதில் காட்டிவிடும்.
சர்க்கரை நோய், இரத்த கொதிப்பு மற்றும் மது அருந்துவோருக்கு இந்த வாட்ச் வரப்பிரசாதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், இதன் விலை அதிகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.