உங்கள் வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லையா..? இனி கவலை வேண்டாம்.. தீர்வு வந்தாச்சு..!
இன்றைய சூழலில் நம்முடைய வீட்டில் கரப்பான் பூச்சிகள் ,ஈக்கள்,கொசுக்கள் மற்றும் மற்ற பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இவை அனைத்திற்கும் காரணம் நாம் இருக்கும் இடத்தை நாம் சுத்தமாக வைத்துக் கொள்ளாததே ஆகும்.
பொதுவாக நம் வீட்டின் சமையலறை மற்றும் கழிவறைகளில் இந்த கரப்பான் பூச்சிகளை அதிகம் பார்க்க முடியும். இதற்குக் காரணம் சுகாதாரமின்றி நாம் வைத்து இருப்பதே ஆகும். அதன்படி நாம் நம் வீட்டில் உள்ள பொருட்களை எவ்வளவு சுத்தம் செய்து கழிவுகளை அகற்றினாலும் இந்த கரப்பான் பூச்சிகளை நம்மால் துரத்த முடியாமல் போய்விடுகிறது. மேலும் இந்த கரப்பான் பூச்சிகள் அழுக்கான இடங்களில் இருந்து வீட்டின் பல்வேறு இடங்களுக்கு செல்வதால் கிருமிகள் அதிகம் பரவும் அபாயம் உள்ளது.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களைக் கொண்டு இந்த கரப்பான் பூச்சிகளை எளிதில் அகற்றலாம். அவை என்னவென்றால் சர்க்கரை மற்றும் பேக்கிங் சோடாவை சம அளவு கலந்து வீட்டின் மூலைகளில் தடவும் போது கரப்பான் பூச்சிகளை வீட்டிலிருந்து எளிதில் அகற்றலாம். மேலும் இதனை வாரம் இரண்டு முறை செய்து வந்தால் மூன்று வாரங்களில் கரப்பான் பூச்சி தொல்லையே இல்லாமல் போய்விடும்.
இதனைத் தொடர்ந்து நம் வீடுகளில் உள்ள பூச்சிகளை அகற்றுவதற்கு வெந்நீரில் சிறிதளவு வேப்ப எண்ணையை கலந்து மூலைக்கு மூலை தெளிக்கும் போது கரப்பான் பூச்சிகள் மட்டுமல்லாது மற்ற பூச்சிகளும் எளிதில் ஓடிவிடும்.