நடிகையை பின்தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்; அதிரடி காட்டிய காவல்துறை.!
கல்லீரல் பிரச்சனையை உருவாக்கும் 6 உணவுகள் என்னென்ன தெரியுமா?
பொதுவாக நமது உடலில் ஒவ்வொரு உறுப்பும் மிக முக்கியமானது. அந்த வகையில் நமது உடலுக்கு இதயம் போலவே கல்லீரலும் முக்கியமான உறுப்பாகும். எனவே கல்லீரல் பிரச்சனையை உருவாக்கும் உணவுகளை தவிர்ப்பது உடலுக்கு நல்லது.
அந்த வகையில் கல்லீரல் பிரச்சனையிலிருந்து பாதுகாத்து தவிர்க்க வேண்டிய உணவுகள் குறித்து இந்த பதிவில் நான் தெரிந்து கொள்ளலாம். கல்லீரல் மிகவும் முக்கியமான குறிப்பு என்பதால் இதன் ஆரோக்கியம் மிகவும் அவசியமாகும்.
எனவே சில உணவுகளை தவிர்த்தாலே கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம். அதன்படி கல்லீரல் பிரச்சினைக்கு முக்கியமாக இருப்பது ஆல்கஹால். எனவே மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
அதேபோல் கொழுப்பு அதிகமாக உள்ள உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக கொழுப்பு அதிகமாக உள்ள மாட்டு இறைச்சியை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
குறிப்பாக சாப்பாட்டில் தேவையான அளவு மட்டுமே உப்பை சேர்த்து சாப்பிட வேண்டும். ஏனென்றால் உப்பில் சோடியம் அதிகளவில் இருப்பதால் கல்லீரல் வீக்கம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
குறிப்பாக பதப்படுத்தப்பட்ட ரொட்டி, பீட்சா மற்றும் பாஸ்தா போன்ற உணவுப் பொருட்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இது கல்லீரலில் கொழுப்பை அதிகரித்து அதிக ஆபத்தை ஏற்படுத்தி விடும்.
அதேபோல் மாவில் செய்யப்பட்ட பொருட்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் அதிக இனிப்பு உணவுகளையும் சாப்பிடக்கூடாது.