சிம்பிளாக நடந்து முடிந்த பிக்பாஸ் பிரதீப் திருமணம்.! பொண்ணு யார் தெரியுமா?? வைரலாகும் புகைப்படம்.!
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த சூடான, சுவையான பேபிகார்ன் பஜ்ஜி.. வீட்டிலேயே செய்வது எப்படி?.!
சூடான, சுவையான பேபிகார்ன் பஜ்ஜி எப்படி செய்வது என்பது பற்றியதுதான் இந்த செய்திக்குறிப்பு.
பேபிகார்னில் அதிக அளவு சத்துக்கள் நிறைந்து காணப்படுவதால், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இன்று பேபிகார்னில் பஜ்ஜி எப்படி செய்வது என்று காணலாம்.
தேவையான பொருட்கள் :
கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - 1 தேக்கரண்டி
கார்ன்பிளவர் மாவு - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
ஆப்ப சோடா - 1 சிட்டிகை
எண்ணெய் - தேவைக்கேற்ப
பேபிகார்ன் - 12
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 3 பல்
பச்சை மிளகாய் - 3
செய்முறை :
★முதலில் பேபிகார்னின் மேல்பட்டையை நீக்கி, கொதிக்கும் நீரில் 8 நிமிடம் போட வேண்டும்.
★பின் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும்.
★அடுத்து ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, கார்ன்பிளவர் மாவை சேர்த்து, அரைத்த விழுதை சேர்த்து, தண்ணீர், ஆப்ப சோடா, உப்பு போட்டு இட்லி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ள வேண்டும்.
★இறுதியாக கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாகியதும், பேபி கார்னை மாவில் நனைத்து எடுத்து எண்ணெயில் போட்டு எடுத்தால் சூடான, சுவையான பேபிகார்ன் பஜ்ஜி தயாராகிவிடும்.