மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"சின்ன வெங்காயம் சாப்பிட்டால் இத்தனை நன்மைகள் இருக்கு!"
நம் எல்லார் வீட்டிலும் கண்டிப்பாக இடம் பிடித்திருக்கும் ஒரு பொருள் தான் சின்ன வெங்காயம். தினசரி சமையலில் உபயோகிக்கும் இந்த சின்ன வெங்காயத்தில் ருசி மட்டுமல்ல ஏராளமான சத்துக்களும் உள்ளன. இந்த சின்ன வெங்காயத்தை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் நோயெதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
இரண்டு சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி 10 நிமிடம் வாயில் போட்டு மெல்லும்போது எரிச்சலில் தொண்டை மற்றும் மூக்கில் உள்ள நுண்கிருமிகள் அழியும். காலையில் வெறும் வயிற்றில் 3 சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி சாப்பிட செரிமானக் கோளாறு தீரும்.
தினமும் 2 சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால், உடலிலுள்ள கெட்ட கொழுப்புகளை அகற்றி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. மேலும் மலச்சிக்கல் பிரச்சனைக்கும் இந்த சின்ன வெங்காயம் அருமருந்தாகும்.
மேலும் உயர் ரத்த அழுத்த பிரச்சனை வராமல் தடுக்கிறது. மேலும் சிறுநீரகத்தில் ஏற்படும் பாதிப்புகளை குணப்படுத்தவும் உதவுகிறது. ஜலதோஷம் உள்ளவர்கள் ஒரு சின்ன வெங்காயத்தை மென்று தின்று வெந்நீர் குடித்தால் ஜலதோஷம் தீரும்.