கீவி பழத்தால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?.. அசத்தல் டிப்ஸ் இதோ.!



Benefits of Kiwi fruit

 

கோடை காலத்தில் உடலில் ஏற்படும் நீரிழப்பை குறைப்பதற்கு கட்டாயம் நாம் நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். இது வெயிலினால் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாக்க உதவி செய்யும். 

கோடை வெயிலில் இருந்து தப்பிக்க

வெள்ளரிக்காய், தர்பூசணி, இளநீர், நுங்கு, மோர், பழைய கஞ்சி ஆகியவை நமது உடல் சூட்டை தணித்து வெயிலின் தாக்கத்தினால் ஏற்படும் பல்வேறு உடல் சார்ந்த பிரச்சனைகளை தவிர்க்கவும் உதவும். இதில் இருக்கும் நீர் சத்துக்கள் நமது உடலில் நீர் இழப்பு ஏற்படாமல் பாதுகாப்பதால், நாம் வெயில் சார்ந்த பிரச்சனைகளிலிருந்து சற்று தப்பித்துக் கொள்ளலாம். 

இதையும் படிங்க: இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கிறதா.? கண்டிப்பாக மருத்துவரை பாருங்க.!?

Kiwi fruit

கீவி பழ நன்மைகள்

அந்த வகையில், கிவி பழத்தில் இருக்கும் வைட்டமின் சி, அமினோ அமிலம், பொட்டாசியம், இரும்புச்சத்து, மெக்னீசியம் போன்றவை உடலுக்கு கட்டாயம் தேவைப்படும் ஒன்றாகும். கிவி பழம் இதயத்துடிப்பை சீராக்கி இதய தமனியில் கட்டிகள் உருவாகும் பிரச்சனையை தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியையும் வலுப்படுத்தும்.தன்மை கொண்டது. 

கீவி குழந்தைகளின் மூளை வளர்ச்சியை மேம்படுத்த பெரிதும் பயன்படுகிறது. புற்றுநோயால் ஏற்படும் அபாயத்தை குறைக்கவும், ரத்த சர்க்கரை அளவை குறைக்கவும் இப்பழம் பெரிதும் பயன்படுகிறது.

இதையும் படிங்க: உங்கள் உடம்பில் வைட்டமின் பி12 குறைவாக உள்ளதா.? இந்த உணவுகளை சாப்பிடுங்க போதும்.!