இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கிறதா.? கண்டிப்பாக மருத்துவரை பாருங்க.!?



symptoms for blood pressure

உயர் ரத்த அழுத்தம்

​​​​​​​​

பொதுவாக நம் உடலில் நோய் பாதிப்பு அதிகம் ஆவதற்கு முன்பே நோய்க்கான அறிகுறிகள் நம் உடலில் ஏற்படும். இவ்வாறு அறிகுறிகள் ஏற்படும் போது நாம் அதை சாதாரணமாக எடுத்துக் கொண்டு மருத்துவரை சந்திக்காமல் இருந்தால் நோய் பாதிப்பு தீவிரமடைந்து விடும். அந்த வகையில் உயர் ரத்த அழுத்த பிரச்சனையினால் உலகெங்கிலும் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

Blood pressure

உயர் ரத்த அழுத்தத்தை நாம் சாதாரணமாக எடுத்துக் கொண்டால் நம் உடல் உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் அபாயம் ஏற்படும். உயர் ரத்த அழுத்த பிரச்சனையினால் இதய செயலிழப்பு, சிறுநீரக செயலிழப்பு, பக்கவாதம் போன்ற பல பாதிப்புகள் ஏற்படுகின்றது. உயர் ரத்த அழுத்தம் இருந்தால் அதற்கான அறிகுறிகள் மற்றும் எவ்வாறு நோய் பாதிப்பை கட்டுப்படுத்தலாம் என்பதை குறித்து இப்பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

இதையும் படிங்க: உங்கள் உடம்பில் வைட்டமின் பி12 குறைவாக உள்ளதா.? இந்த உணவுகளை சாப்பிடுங்க போதும்.!

உயர்

ரத்த அழுத்தத்தின் அறிகுறிகள்

ஒவ்வொரு வருடமும் மே 17ஆம் தேதி உலக ஹைபர் டென்ஷன் தினமாக இருந்து வருகிறது. உயர் ரத்த அழுத்தத்தை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. எனவே உயர் ரத்த அழுத்தத்தின் அறிகுறிகளாக மருத்துவர்கள் கூறி வருவது, ஒரு சிலருக்கு ஒற்றை தலைவலி, அதிக வியர்வை, கோபம், தலைசுற்றல், மயக்கம், வாந்தி, இதய படபடப்பு போன்ற அறிகுறிகள் இருந்து வருகிறது. இந்த அறிகுறிகளில் ஏதாவது ஒன்று நம் உடலில் இருந்தாலும் உடனடியாக மருத்துவரை சந்திக்க வேண்டும்.

Blood pressure

உயர்

ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

அன்றாடம் உடற்பயிற்சி செய்வது, ஊட்டச்சத்தான உணவுகளை உண்பது, காரமான எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்ப்பது, புகைபிடித்தல், மது அருந்துதல் போன்றவைகளை தவிர்ப்பது, சரியான நேரம் தூங்குவது, போன்றவைகள் நம் வாழ்க்கையில் பின்பற்றி வந்தால் உயர் ரத்த அழுத்தத்தை எளிதாக கட்டுப்படுத்தலாம்.

இதையும் படிங்க: தினமும் காலையில் ஊற வைத்த பாதாமை சாப்பிட்டு வந்தால், உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா.!?