தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
மெனோபாஸ், நரம்பு தளர்ச்சியை சரிசெய்யும் முட்டைக்கோஸ் பட்டாணி சப்ஜி.. வீட்டிலேயே தயாரிப்பது எப்படி??..!
சத்துக்கள் நிறைந்த முட்டைகோஸ் பட்டாணி சப்ஜி எவ்வாறு செய்வது என்பதனைப் பற்றியதுதான் இந்த செய்திக்குறிப்பு.
முட்டைக்கோஸ் சாப்பிடுவதன் மூலமாக பெண்களின் மெனோபாஸ் காலங்களில் உண்டாகும் கால்சியம், பாஸ்பரஸ் இழப்பை ஈடு செய்ய உதவுகிறது. மேலும், நரம்புகளை வலுப்படுத்தி நரம்புத்தளர்ச்சியை போக்குவதற்கும், நோய்த்தொற்றுகள் ஏற்படாமல் இருப்பதற்கும் முட்டைகோஸ் உதவுகிறது.
தேவையான பொருட்கள் :
பச்சைமிளகாய் - 2
இஞ்சி - சிறிய துண்டு
கடுகு - சிறிதளவு
கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி
உப்பு - தேவையான அளவு
சீரகம் - 1 தேக்கரண்டி
தனியாத்தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
முட்டைகோஸ் - 250 கிராம்
தக்காளி சாறு - 2
பட்டாணி - 1 கப்
செய்முறை :
★முதலில் முட்டைகோஸை நன்றாக கழுவி சுத்தம் செய்து பொடிப் பொடியாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். பின் பச்சைமிளகாய், மற்றும் இஞ்சி, கொத்தமல்லி ஆகியவற்றை சிறிது சிறிதாக வேண்டிக்கொள்ளவும்.
★அடுத்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, சூடானதும் அதில் கடுகு போட்டு தாளிக்க வேண்டும். பின் அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை சேர்த்து வதக்கி, நறுக்கிய முட்டைகோஸ் போட்டு 5 நிமிடம் வரை நன்றாக வதக்க வேண்டும்.
★தொடர்ந்து அதில் பட்டாணியை சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து, சிறிதளவு உப்பு சேர்த்து கிளறி இரண்டு நிமிடங்கள் வரை மூடி போட்டு வேக விடவேண்டும். இரண்டு நிமிடங்களுக்கு பின்னர் அதில் தக்காளி சாறு சேர்க்க வேண்டும்.
★இறுதியாக மிளகாய் தூள், தனியா தூள் மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து 5 நிமிடம் வேகவிட்டால் ஈசியான, சுவையான முட்டைக்கோஸ் பட்டாணி சப்ஜி தயாராகிவிடும்.