"அய்யோ திருமணமா.?! எப்பவுமே இல்ல" பொன்னியின் செல்வன் நடிகை.. பகீர் அறிவிப்பு.!
குழந்தைகளுக்கு உணவில் உப்பு சேர்த்து கொடுக்கலாமா..
பொதுவாகவே நம்மில் எல்லோரும் உணவில் உப்பு சேர்த்து சாப்பிடுவோம். எவ்வளவு சுவையாகவும் மணமாகவும் ஒரு உணவை நாம் சமைத்தாலும் அதில் உப்பு இல்லை என்றால் அந்த உணவு எந்த சுவையும் இல்லாதது போல் ஆகிவிடும்.
அறிவியலின் படி உப்பு என்பது சோடியமும் குளோரைடும் கலந்த ஒரு கலவையாகும் .இதில் நமக்கு ஒரு நாளைக்கு 2000mg அளவான சோடியம் நமது உடலுக்கு தேவையான ஐந்து கிராம் அளவான உப்பு நமது உடலுக்கு போதுமானது .
ஆனால் குழந்தைகளுக்கு முதல் 12 மாதங்கள் வரை உப்பு கொடுக்க கூடாது, ஏனெனில் நாம் சாப்பிடும் உணவில் உள்ள அதிகப்படியான உப்பினை சிறுநீரகம் சுத்தம் செய்து வெளியேற்ற உதவுகிறது. ஆனால் குழந்தைகளின் சிறுநீரகம் முழுமையாக வளர்ச்சி அடைந்து இருக்காது இதனால் உப்பை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
அவ்வாறு உப்பு சேர்த்தால் அந்த உப்பு குழந்தையின் உடலில் தங்கி விடும் அதை சிறுநீரகம் சுத்தம் செய்து வெளியேற்ற முடியாது, மேலும் கை கால் வீக்கம் ஏற்பட்டு குழந்தைகள் அவதியுறுவார்கள். மேலும் குழந்தைகள் 10 வயது வரை கூட மிக குறைந்த அளவான உப்பு கொடுப்பதே சரியானது.