மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"ரத்தப் புற்றுநோயை உண்டாக்கும் நாப்தலின் உருண்டைகள்!" அதிர்ச்சித் தகவல்!
வீடுகளில் பூச்சி நடமாட்டம் அதிகமுள்ள இடங்களான துணி வைக்கும் அலமாரி, பீரோ, சமையலறை, கழிவறை உள்ளிட்ட பல இடங்களில் நாப்தலின் உருண்டைகளை நாம் பயன்படுத்துகிறோம். அந்துருண்டை, பூச்சி உருண்டை என்ற பல பெயர்களில் நாப்தலின் உருண்டை.
நிலக்கரியில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட பொருளுடன் சில வாசனைப் பொருட்களைப் பயன்படுத்தி நாப்தலின் உருண்டைகளைத் தயாரிக்கின்றனர். இதிலிருந்து வரும் வாயு பூச்சிகளைக் கொன்றுவிடுகிறது. எனவே நாம் இந்த நாப்தலின் உருண்டைகளை விரும்பி வருகிறோம்.
இந்த உருண்டைகளைத் தொடர்ந்து பயன்படுத்தினால் தலை சுற்றல், வாந்தி, மயக்கம், ஆஸ்துமா, சைனஸ், ரத்த சோகை, ரத்த அணுக்கள் பாதிப்பு மற்றும் ரத்த புற்றுநோய் வரை ஏற்படும் அபாயம் உள்ளது. இதற்கு காரணம் நாப்தலின் உருண்டையில் இருந்து வரும் வாயு கலந்த காற்றை சுவாசிப்பது தான்.
ஒரு முறை இந்த காற்றை சுவாசிப்பது 0.002 மில்லி கிராம் நாப்தலினை உண்பதற்கு சமமாகும் என்பது ஆராய்ச்சியின் மூலம் தெரிய வந்துள்ளது. உயிருக்கு ஆபத்தான ரத்தப் புற்றுநோய்க்கு காரணியாக இருப்பதால் இந்த நாப்தலின் உருண்டைகளை பயன்படுத்துவதை தவிர்த்தல் நலம்.