உங்களின் வீட்டில் செல்ல குட்டீஸ் இருக்காங்களா?.. அப்போ கட்டாயம் இவற்றையெல்லாம் தெரிஞ்சிக்கோங்க.!



Child Carrying Tips to Parent Tamil

 

நமது வீடுகளில் உள்ள சில பொருட்களால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும். ஏனெனில் அவர்களின் குறும்புத்தனம் மற்றும் அறியாமை காரணமாக அவை நிகழ்ந்துவிடும். இதனால் பெற்றோர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ளவேண்டிய சில விஷயங்கள் குறித்து இன்று காணலாம். 

வீட்டில் இருக்கும் குழந்தைகள் சமையல் அறைப்பகுதியில் விளையாடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் சூடான எண்ணெய், தண்ணீர், தீப்பெட்டி போன்றவை வைத்திருப்போம். கத்தி போன்றவையும் இருக்கும். இவைகளை குழந்தைகள் கைப்பற்றும்போது காயங்கள் ஏற்படலாம். 

அயர்ன் பாக்ஸ், மிக்சி, சுவிட்ச் அருகில் குழந்தைகளை கொண்டு செல்லக்கூடாது. அவற்றை பெற்றோர்கள் உபயோகம் செய்யும்போதும் கவனம் வேண்டும். பெட்ரோல், மண்ணெண்ணெய், பூச்சிக்கொல்லி போன்ற பொருட்களை குழந்தைகள் தொடும் அளவிலான தூரத்தில் வைக்க கூடாது. 

children

அதேபோல, குளிர்பானத்தை குடித்துவிட்டு அதன் காலி பாட்டிலில் பெட்ரோல் போன்றவற்றை ஊற்றிவைக்க கூடாது. குழந்தைகளுக்கு நினைவுத்திறன் மற்றும் நமது செயல்திறனை கவனித்து செய்யும் ஆற்றல் உண்டு என்பதால், குளிர்பானம் என எண்ணி அதனை குடிக்க வாய்ப்புள்ளது. 

ஊசி, நாணயம், பேட்டரி, ஆணி, கண்ணாடி போன்ற சிறிய அளவிலான பொருட்களையும் குழந்தைகள் அருகே வைக்க கூடாது. இவற்றை குழந்தைகள் வாயில் வைத்து ருசிபார்த்து திடீரென விழுங்கிவிடும் ஆபத்தும் நடக்கும். குழந்தைகளுக்கு கொடுத்த மருந்துகளை கூட தூரத்தில் வைப்பது நல்லது.