திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சாக்லேட் புட்டிங் செய்வது இவ்வளவு ஈசியா..?! வாங்க செய்யலாம்..!!
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சாக்லேட் புட்டிங் செய்வது எப்படி பார்க்கலாம் வாங்க..
சாக்லேட் புட்டிங் செய்ய தேவையான பொருட்கள்:
பால் - 1½ கப்
சர்க்கரை 6 டேபிள் ஸ்பூன்
டேபிள் ஸ்பூன் சோளமாவு - 2 டேபிள் ஸ்பூன்
கொக்கோ பவுடர் - ¼ கப்
வெண்ணிலா எசன்ஸ் - ½ டீஸ்பூன்
துருவிய சாக்லேட் தேவையான அளவு.
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, கொக்கோ பவுடர் மற்றும் சோள மாவு ஆகியவற்றை கொட்டி நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
அதன் பிறகு அந்த கலவையில் பாலை சிறிது சிறிதாக ஊற்றி கட்டியில்லாமல் நன்றாக கலக்க வேண்டும்.
அதன் பின்னர் இந்தக் கலவையை அடுப்பில் வைத்து மிதமான தீயில் வைத்து கெட்டியாகும் வரை தொடர்ந்து கலக்கிக் கொண்டே இருக்க வேண்டும்.
கலவை கெட்டியானதும் வெண்ணிலா எசன்ஸ் ஊற்றி கிளறி அடுப்பில் இருந்து இறக்கி, பின்னர் அதை கப்களில் ஊற்றி ஃபிரிட்ஜில் வைக்கவும். நன்றாகக் செட்டானதும் துருவிய சாக்லேட்டை மேலே தூவி சாப்பிடலாம்.