வெறும் வயிற்றில் காபி குடிப்பது நல்லதா! கெட்டதா!



Coffee

அனைவரும் வழக்கமாக தினமும்  காபி அருந்துவது வழக்கம். ஒருசிலர் மட்டும் இந்த பழக்கம் இல்லாமல் இருப்பார்கள். அவ்வாறு தினமும் காலை மாலை என இருவேளையும் காபி குடிக்கும் நபரா நீங்கள்?

அப்படி என்றால் சற்று படியுங்கள். பொதுவாக காபி குடிப்பதை விட பால் அருந்துவது உடலுக்கு மிகவும் நல்லது. நீங்கள் அருந்தும்  காபியில் நன்மை தரும் விஷயங்களை விட தீங்கு தரும் விஷயங்கள்தான் மிகவும் அதிகமா உள்ளதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

பாலில் கால்சியம் சத்து அதிகமாக  உள்ளது மேலும், வளரும் பிள்ளைகள் அதிகம் பால் அருந்தும் போது, வளர்ச்சி அதிகரிக்க உதவுகிறது. மேலும் கால்சியம் அதிகமாக இருப்பதால் எலும்பு  நன்கு வலுப்பெறும்.

Coffee

ஒரு சிலர் காலையில் காபி அருந்துவதை மட்டும் உணவாக உட்கொள்கின்றனர். இதனால் குடலில் பலவிதமான பிரச்சனைகள் ஏற்பட  வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நீங்கள் மிகவும் காபி பிரியர் எனில் காலை உணவு முடித்த பின்பு நீங்கள் உட்கொள்ளலாம். அதிலும் ஒரு நாளைக்கு இரண்டு முறை காபி குடிப்பது உடம்புக்கு நல்லது.

எனவே நாம் அனைவரும் நம் உடம்பில் தேவை அறிந்து செயல்பட்டால் நலமுடன் வாழலாம். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதுபோல, எதுவாக இருந்தாலும் அளவோடு இருப்பது உடலுக்கும், உயிருக்கு நன்மை பயக்கும்.