சீப் பப்ளிசிட்டிக்காக இப்படியா காமிக்கிறது? நடிகையை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.!
சமையல் அறை மந்திரம்; அசத்தல் ஸ்மார்ட் டிப்ஸ் இதோ.!

- சமையலில் சிறந்து விளங்க நினைக்கும் இல்லத்தரசிகள் மற்றும் பேச்சுலர்ஸ், கீழே கொடுக்கப்பட்டுள்ள சில டிப்ஸை தெரிந்துகொண்டால் உங்களுக்கு பயனாக இருக்கும்.
- இஞ்சி-பூண்டு விழுது அரைக்கும்போது, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து அரைக்க நீண்ட நாட்கள் கெட்டுப்போகாது.
- வாழைப்பூவை உப்பு சேர்த்த நீரில் வெட்டிவைக்க கருக்காமல் இருக்கும்.
- கடல்பாசி கண்ணாடியாக இறுதியில் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்க்கலாம். இதையும் படிங்க: ருசியான சுரைக்காய் வடை செய்வது எப்படி? அசத்தல் டிப்ஸ் இதோ.!
- இறைச்சிகளை கழுவும்போது மஞ்சள் தூள், உப்பு, நலனே சேர்த்து கழுவ இறைச்சி வாசம் இருக்காது.
- சுவீட் செய்யும்போது சிட்டிகை அளவு உப்பு சேர்க்க கூடுதல் சுவை கிடைக்கும்.
- தக்காளி சட்னி சுவையாக செய்ய சிறிதளவு புளி அல்லது எலுமிச்சை சாறு சேர்க்கலாம்.
- சாம்பாருக்கு துவரம்பருப்பு வேகவைக்கும்போது, நீரில் நல்லெண்ணெய் விட பொங்கிவராது.
- பருப்புக்குழம்புக்கு வெங்காயத்தை நெய்யில் தாளித்து சேர்க்க சுவை நன்றாக இருக்கும்.
- வத்தல், மீன் குழம்பில் இறுதியில் வெல்லம் சேர்க்க ருசி அதிகரிக்கும்..
- அவசர சட்னிக்கு தேங்காய்ப்பாலில் பொட்டுக்கடலை பொடி, உப்பு சேர்த்து தாளித்து இறக்கலாம். தனி பொட்டுக்கடலையை பச்சை மிளகாய், உப்பு சேர்த்து அரைத்து, தாளித்து அவசர சட்னி செய்யலாம்.
- இட்டிலி பஞ்சுபோல கிடைக்க மாவில் ஒரு ஸ்பூன் அளவில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, 15 நிமிடம் கழித்து இட்டிலி ஊற்றலாம்.
- இதையும் படிங்க: சுவையான வாழைப்பூ வடை: செய்வது எப்படி?