டிவி மற்றும் ஏசி-யை இப்படி ஆப் செய்தால் கரண்ட் பில் அதிகமாகுமாம்!! பயனுள்ள தகவல்..
தொலைக்காட்சியை ரிமோட்டில் மட்டும் ஆப் செய்தால் தேவை இல்லாமல் மின்சாரம் விரயமாகும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
உலகம் முழுவதும் அனைவரின் வீட்டிலும் பெரும்பாலும் இருக்கக்கூடிய சாதனங்களில் ஒன்று தொலைக்காட்சி. பொழுது போக்கிற்காக பயன்படுத்தப்படும் சாதனங்களில் தொலைக்காட்சிக்கு மிக முக்கிய பங்கு உண்டு. பொதுவாக தொலைக்காட்சியை ஆன் செய்துவிட்டு நம்மில் பெரும்பாலானோர் ரிமோட் மூலம் மட்டும் தொலைக்காட்சியை ஆப் செய்கிறோம்.
ஸ்விட்சை ஆப் செய்ய மறந்துவிடுகிறோம். இவ்வாறு செய்வதால் தேவை இல்லாத மின்சார இழப்பு ஏற்படுவதாக குடிமக்கள் நுகர்வோர் மற்றும் குடிமை சார் செயல்பாடுகள் அமைப்பின் ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
அதேபோல் வீட்டில் உள்ள ஏசியை பயன்படுத்திவிட்டு, ஸ்டெபிலைஸரை நிறுத்தாமல் ரிமோட் மூலமாக மாட்டும் ஏசியை ஆப் செய்வதும் தேவை இல்லாத மின்சார இழப்புக்கு வழிவகுப்பதாகவும் குடிமை சார் செயல்பாடுகள் அமைப்பின் ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.