மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரத்தசோகை நீங்கவும், நுரையீரலை பாதுகாக்கவும் கறிவேப்பில்லை பொடி இட்லி..!
இதயம் மற்றும் நுரையீரலுக்கு நன்மையளிக்கும் கருவேப்பிலை பொடி இட்லி எவ்வாறு சமைப்பது என்பது பற்றியதுதான் இந்த செய்திக்குறிப்பு.
கறிவேப்பிலையில் நார்ச்சத்து, பாஸ்பரஸ், கால்சியம், கார்போஹைட்ரேட் மற்றும் விட்டமின் ஈ, விட்டமின் பி1 சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. அத்துடன் கருவேப்பிலை நுரையீரலை பாதுகாக்கவும், ரத்தசோகை நீங்கவும், இதயத்தை சீராக்கவும் உதவுகிறது.
தேவையான பொருட்கள் :
உளுத்தம்பருப்பு - சிறிதளவு
கடுகு - 1/2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 6
கறிவேப்பிலை - 2 கப்
உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை :
★முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, எண்ணெய் சேர்க்காமல் கடலைப்பருப்பு, 4 காய்ந்தமிளகாய், உளுத்தம்பருப்பு, மிளகு, சீரகம், உப்பு, கடுகு, பெருங்காயத்தூள் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும்.
★பின் அனைத்தையும் ஒரு மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து எடுத்தால் கறிவேப்பிலை பொடி தயாராகிவிடும்.
★அடுத்து மீண்டும் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, 2 காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.
★தொடர்ந்து மினி இட்லி மற்றும் கருவேப்பிலை பொடி ஆகியவற்றை சேர்த்து மெதுவாக பிரட்டி எடுத்தால் சூப்பரான கருவேப்பிலை பொடி இட்லி ரெடியாகிவிடும்.