அடிக்கடி புகைப்பிடிப்பவரா நீங்கள்? கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்!



Disadvantages of smoking habits

புகைப்பிடிப்பது உடலுக்கு பல்வேறு தீமைகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் பலரும் எச்சரித்தும், விழிப்புணர்வு செய்தும் வருகின்றனர். எனவே புகை பிடிப்பதால் உடலுக்கு ஏற்படும் தீமைகள் குறித்து இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

புகை பிடிப்பதால் இதய செயலிழப்பு, மாரடைப்பு, பக்கவாதம், உயர் ரத்த அழுத்தம், நுரையீரல் புற்றுநோய், வாய், தொண்டை, குரல்வளை, உணவுக் குழாய், கணையம், சிறுநீர்ப்பை, கர்ப்பப்பை, கல்லீரல் மற்றும் மார்பகம் போன்ற புற்று நோய்களும் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

Smoking

புகை பிடிப்பவர்கள் மட்டுமில்லாமல் அந்த புகையை சுவாசிப்பவர்களுக்கும் பல்வேறு தீமைகளை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. புகைப்பிடிப்பதால் வேலை நேர இழப்பு மற்றும் உற்பத்தி திறன் குறைவு ஏற்படுகிறது.

புகை பிடிப்பதால் உடலுக்கு எந்த ஒரு நன்மையும் கிடைக்காது. ‌தேவையற்ற வீண் செலவுகளும், நேர விரயமும் மட்டும் தான் கிடைக்கும். மேலும், காசு கொடுத்து நம் உயிரை நாமே கொல்வது தான் புகைப்பிடிக்கும் பழக்கம்.

Smoking

ஆனால், புகைப்பிடிப்பதை விட்டு விட்டால் சுவாசிப்பதில் எளிமை, சுவை மற்றும்  வாசனை உணர்வு மேம்படுதல் போன்ற பல்வேறு நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக, புகை பிடிப்பதற்கு பதிலாக உடற்பயிற்சி, யோகா, தியானம் போன்ற ஆரோக்கியமான நடவடிக்கைகளில் ஈடுபடுவது உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கும்.