மது அருந்திவிட்டும், புகை பிடித்துவிட்டும் உடனடியாக சூடான தேநீர் அருந்தாதீர்கள்! உயிருக்கே ஆபத்து!
மது அருந்திவிட்டும், புகை பிடித்துவிட்டும் உடனடியாக சூடான தேநீர் அருந்துவதால் எஸாகேஜியல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் என சிகிச்சையாளர்கள் கூறுகின்றனர்.
தற்போதைய வாழ்க்கைமுறையில் அதிகப்படியானோருக்கு மது மற்றும் புகைப்பழக்கம் உள்ளது. இதனாலேயே பலருக்கு இளம் வயதிலேயே நோய்கள் வருகின்றது. தற்போதைய காலத்தில் எந்த கெட்ட பழக்கமும் இல்லாமல் இருப்பவர்களுக்கே ஏராளமான நோய்கள் தாக்குகின்றன. இந்த நிலையில் உயிருக்கு தீங்கு விளைவிக்கும் மது, புகை பழக்கத்தை கற்றுக்கொண்டால் மரணம் எளிதில் வந்துவிடும். எனவே இந்த பழக்கத்தை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
சிலருக்கு மது அருந்திவிட்டு, புகை பிடித்துவிட்டு தேநீர் அருந்தும் பழக்கம் உள்ளது. அருந்திவிட்டு புகை பிடித்துவிட்டு சூடாகத் தேநீர் அருந்துவது புற்றுநோயால் இறப்பு உண்டாவதை ஐந்து மடங்கு அதிகப்படுத்தும் என சிகிச்சையாளர்கள் கூறுகின்றனர்.
மது அருந்திவிட்டு, புகை பிடித்துவிட்டும் சூடாகத் தேநீர் அருந்துவதால் தொண்டைக்குழி, உணவுக்குழாய் ஆகியவற்றில் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக சிகிச்சையாளர்கள் கூறுகின்றனர். எனவே தயவு செய்து இந்த பழக்கத்தை விட்டுவிடுங்கள். பலருக்கும் இந்த விஷயத்தை பகிர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.