மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மக்களே மறந்து கூட இந்த பொருட்களை பிறருக்கு தானமாக கொடுத்து விடாதீர்கள்... என்ன நடக்கும் தெரியுமா.?
நாம் வீட்டிற்கு அருகில் வசிக்கும் குடும்பத்தினருடன் சில கொடுத்தல், வாங்கல் இருப்பது வழக்கம். சில உறவினர்களிடையே அதிகப்படியான கொடுத்தல், வாங்கல் இருப்பதை பார்த்திருப்போம். எனினும் சில பொருட்களை பிறருக்கு தானமாக கொடுத்தால் அது கொடுப்பவருக்கு மிகப்பெரிய பாவத்தை ஏற்படுத்தும் என சாஸ்திரங்கள் சொல்கிறது. அப்படியாக எந்த பொருட்களை மறுந்தும் கூட கொடுக்க கூடாது என்று இந்த பதில் பார்ப்போம்.
1. ஆடைகளை தானமாக கொடுப்பது சிறந்தது என்றாலும் அதில் புதிய மற்றும் நல்ல நிலையில் இருக்கும் ஆடைகளை தான் தானமாக கொடுக்க வேண்டும். கிழிந்த அல்லது தீயில் கருகிய ஆடைகளை என்றைக்கும் தானமாக கொடுக்க கூடாது. அப்படி கொடுத்தால் அது கொடுப்பவருக்கு மிகப்பெரிய பாவத்தை விளைவிக்கும் என்று ஐதீகம் கூறுகிறது.
2. அதே போல் சமையலுக்கு பயன்படுத்தும் உப்பினை மட்டும் கடனாகவும் சரி தானமாகவும் வழங்கவும் கூடாது பிறரிடமிருந்து நானும் பெறக்கூடாது. அப்படி நீங்கள் உப்பினை வாங்க நேர்ந்தால் அதற்குரிய பணத்தை தந்து வாங்கி கொள்ளலாம். ஏனெனில் நம் வீட்டில் மகாலட்சுமி இருக்கும் பொருட்களில் உப்பும் மிகவும் முக்கியமானது. இதன் காரணமாகத்தான் உப்பை தானமாக கொடுக்கக் கூடாது என சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.
3. நமது வீட்டை தூய்மையாக்க பயன்படும் துடைப்பத்தை மட்டும் தானமாக பெற்று கொள்ளக்கூடாது. மீறி நாம் துடைப்பத்தை கொடுத்தால் துடைப்பில் இருக்கும் மகாலட்சுமியின் அருள் அவர்களுக்கு சென்று விடும். எனவே தான் அவற்றை தானமாக வழங்க கூடாது என கூறப்படுகிறது.