திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
குளியலறையில் மறந்தும் கூட இந்தப் பொருட்களை வைத்து விடாதீர்கள்... என்ன காரணம் தெரியுமா.?
வாஸ்து சாஸ்திரம் படி சில பொருட்களை மறந்தும் கூட குளியலறையில் வைத்து விடாதீர்கள். அப்படியாக வைப்பதால் என்ன நடக்கும் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.
உங்கள் வீட்டின் குளியல் அறையில் ஈரமான துணிகள் மற்றும் அழுக்கு படிந்த துணிகளை வைக்க கூடாது. அப்படி வைப்பதால் வாஸ்து தோஷத்தை ஏற்படுத்துவதாக வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
உங்கள் வீட்டின் குளியலறையில் இருக்கும் வாளியில் எப்போதும் சிறிதளவு நீர் இருக்க வையுங்கள். வெற்று வாளியுடன் வைப்பது உங்கள் வீட்டில் பண பற்றாக்குறை ஏற்பட காரணமாக அமையும். அதேபோல் உடைந்த வாளியை வைப்பது எதிர் மறை ஆற்றலை ஈர்ப்பதாக அமையும்.
சிலர் குளியலறையில் செடிகளை வளர்ப்பதை பார்த்திருப்போம். அவை நல்லது என்றாலும் வாடிப்போன அல்லது உலர்ந்து போன செடிகளை வைக்க கூடாது, அது பெரும் துரதிஷ்டத்தை வீட்டுக்குள் கொண்டு வரும் மேலும் பண கஷ்டத்தை ஏற்படுத்தும்.