மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உலர் திராட்சையில் தேநீர் செய்வது எப்படி.. என்னென்ன நன்மைகள் தெரியுமா.?
நாம் அன்றாடம் தினமும் காலையில் எழுந்தவுடன் டீ அல்லது காபி அருந்துவது பழக்கமாக கொண்டிருப்போம். இந்த பழக்கம் பலருக்கும் உடல் நல கேடையே விளைவிக்கும். ஆனால் இந்த பழக்கத்தை மாற்றிக் கொள்வது என்பது எப்படி என்று பலருக்கும் தெரிந்திருக்காது.
தினமும் காலையில் பால் டீ, தேயிலை டீ போன்றவை அருந்துவதற்கு பதில் உலர் திராட்சையில் டீ செய்து அருந்தலாம். இதனால் உடலுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கின்றது. இரும்புச்சத்து, வைட்டமின்கள, ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் போன்ற சத்துக்கள் இந்த டீயில் இருக்கின்றன.
உலர் திராட்சையில் தேநீர் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
முதலில் ஒரு பாத்திரத்தில் உலர் திராட்சையை இரவில் ஊற வைக்க வேண்டும். பின்பு ஊற வைத்த உலர் திராட்சையை சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து குடித்து வரலாம். தேவைப்பட்டால் தேன் அல்லது வெல்லம் சிறிது சேர்த்துக் கொள்ளலாம்.