#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வாய்ப்புண்ணை ஒரே நாளில் சரி செய்ய வேண்டுமா... ஈசி டிப்ஸ் இதோ...
வாயிற்றில் புண் இருந்தால் அது வாயில் புண்ணாக வெளிப்படும் அல்லது அதிகப்படியான நீர் அருந்தாமலும் இருந்தால் வாயில் புண் ஏற்படும். அப்படி ஏற்படும் வாய்ப்புண்ணை பொறுத்துக் கொள்வது என்பது அவ்வளவு எளிதல்ல. வாய்ப்புண் வந்த பின்னால் நம்மால் விரும்பிய எதையும் சாப்பிட முடியாமல் போய்விடும்.
அப்படியாக அவதிப்படுத்து வாய்ப்புண்ணை எளிதில் குணமாக்குவது எப்படி என்று இங்கு பார்ப்போம். அரை மூடித் தேங்காயை அரைத்து, அதிலிருந்து பால் எடுத்துக் கொள்ளுங்கள். சிறிது சிறிதாக தேங்காய் பாலை புண் உள்ள இடத்தில் படும் படியாக ருசித்து குடித்து வாருங்கள்.
வாய் புண்ணுக்கு வல்லாரை கீரை சிறந்த நிவாரணம் தரும். வல்லாரை கீரையை இடித்து அல்லது நன்றாக அரைத்து சிறிதளவு சாறு எடுத்து வாய்ப் புண்ணில் பூசினால் வாய் புண் குணமாகும். கற்றாழை ஜெல் சிறிதளவு எடுத்து அதில் கொஞ்சமாக நெய் சேர்த்து கலவையாக புண் இருந்த இடத்தில் பூசி வந்தாலும் வாய்ப்புண் குணமாகும்.
வெண்டைக்காயை நெய் விட்டு ஒரு நிமிடம் வதக்கி, அப்படியே சாப்பிட்டால் வயிற்றுப் புண்களும் வாய் புண்ணும் குணமாகும். வீட்டில் தேன் இருந்தால் ஒரு கரண்டி தேங்காய் பாலில் சிறிதளவு தேன் சேர்த்து மிக்ஸ் செய்து வாயில் புண் உள்ள இடத்தில் பூசிவிடுங்கள். ஒரே நாளில் நல்ல பலன் தெரியும்.