"அய்யோ திருமணமா.?! எப்பவுமே இல்ல" பொன்னியின் செல்வன் நடிகை.. பகீர் அறிவிப்பு.!
எழுந்ததும் டீ குடிக்கும் பழக்கம் இருந்தால் கண்டிப்பாக இதை தெரிந்து கொள்ளவும்.!
காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் டீ குடிக்கும் பழக்கம் உடலுக்கு சுறுசுறுப்பையும் புத்துணர்ச்சியும் குடுப்பதாக சிலர் நினைத்து அருந்துவார்கள். உண்மை என்னவென்றால் அது நம் உடலில் பெரும் அளவில் தீங்கு மற்றும் செரிமான கோளாறுகளை உண்டாக்கும். காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் முதலில் தண்ணீர் அருந்தி விட்டு பிறகு 1 மணி நேரம் கழித்து டீ குடிக்கலாம் என்று மருத்துவரால் கூறப்படுகிறது.
இப்பழக்கம் உங்களுடைய வயிற்றில் உள்ள அமிலங்களை தூண்டுவதோடு மட்டுமல்லாமல் அவை பெரும் அளவில் வயிற்றை சேதப்படுதுகின்றன. காலை வேளையில் வெறும் வயிற்றில் டீ குடிப்பதனால் அஜீரணக் கோளாறு, பித்தம், உடல் வீக்கம் மற்றும் நெஞ்செரிச்சல் ஆகியவற்றை உண்டாக்கும். தியோபிலின் என்ற கலவை டீ யில் உள்ளதால் இவை நீரிழப்பு மற்றும் மலச்சிக்கல் போன்றவற்றை ஏற்படுத்துகிறது.
டீ குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு மன அழுத்தம் மற்றும் தேவை இல்லாத கவலை ஏற்படும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். வெறும் வயிற்றில் டீ யை அதிகமாக உட்கொண்டால் தூக்கமின்மை மற்றும் இரும்புச்சத்து குறைபாடு போன்ற விளைவுகளை ஏற்படுத்தி அவை நம் உடலில் அதிகளவில் எதிர்மறையான பிரச்சனைகளை உண்டாக்கும்.
டீகுடிக்கும் பழக்கம் உள்ளவர் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தேன் அல்லது நெல்லிக்காய் போன்ற சத்து நிறைந்த பானங்களை உட்கொள்ளவது நன்று.டீ குடித்தால் தலைவலி நீங்கும் என்று சிலர் கருதுகிறார்கள். ஆனால் டீ யில் அதிகளவில் காஃபின் உள்ளதால் அவை நம் உடலில் சென்று அந்த தலைவலியை மேலும் அதிகப்படுத்த நேரிடும். பொதுவாக டீ அல்லது காபி போன்ற பானங்களை வெறும் வயிற்றில் குடிப்பதால் அது உங்களை அடிக்கடி சிறுநீர் கழிக்க வைப்பதால் நீரிழப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு நேரிடும்.
டானின் என்ற தனிமம் டீ யில் இருப்பதால் அது நீங்கள் உண்ணும் உணவில் இருந்து இரும்புச்சத்தை உறிஞ்சுவதைத் தடுப்பதோடு மட்டுமல்லாமல் வயிற்றில் உள்ள திரவங்களின் அமிலத்தை மற்றும் கார சமநிலையையும் சீர்குலைத்து கொப்ரோலைட்டில் நீரிழப்பு விளைவையும் ஏற்படுத்துகின்றது. டீ குடிப்பதற்கு பதிலாக காலையில் எழுந்து வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான தண்ணீர் குடித்துவந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.