சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க வேண்டுமா? இந்த உணவுகள் அவசியம்!
சருமத்தை இளமையாகவும், படபடப்பாகவும் வைத்துக்கொள்ள அவசியமாக இருப்பது வைட்டமின் கே. வைட்டமின் கே நிறைந்த அதிக உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் நமது சருமத்தை அழகாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க முடியும். எனவே நாம் உணவும் உன்னை வைட்டமின் கே நிறைந்த உணவுகளை அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அந்த வகையில் வைட்டமின் கே நிறைந்த உணவு வகைகள் குறித்து இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம். வைட்டமின் கே உணவுகளை சாப்பிடுவதன் மூலம் காயங்கள் மற்றும் உப்பிலங்களை விரைவாக குணப்படுத்த உதவுகிறது.
அதற்கு காரணம் வைட்டமின் கே சத்து ஒரு ஆக்சிஜனேற்றியாகவும் செயல்படுவதால் சருமத்தை நீண்ட காலத்திற்கு பாதுகாக்கிறது. வைட்டமின் கே உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்வதால் சருமத்தின் வீக்கம் மற்றும் காயங்கள் ஏற்படுவதை தடுக்கிறது.
அதேபோல் வறண்ட சருமம் மற்றும் கருவளையங்கள் ஏற்படுவதையும் தடுக்க உதவுகிறது. அதிலும் குறிப்பாக தோழி வயதான தோற்றத்தை குறைக்க உதவுகிறது.
வைட்டமின் கே சத்துக்கள் பிரக்கோலி, பசலைக் கீரை போன்ற உணவுகளில் அதிக அளவில் நிறைந்துள்ளது. குறிப்பாக பால் பொருட்களில் வைட்டமின் கே சத்து எளிதாக கிடைக்கிறது.