பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாக்க சில டிப்ஸ்.!
தற்போது கோடை வெயில் மக்களை கடுமையாக வாட்டி வதைக்கிறது. வெயிலின் கடும் தாக்கத்தினால் உடலுக்கு பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்வதற்கு இந்த மாதிரியான உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்ளலாம் மற்றும் இப்படியான வாழ்க்கை முறையை பின்பற்றலாம் என்பதை இந்த பதிவில் காணலாம்.
உடல் வெப்பத்தை சமநிலையில் வைத்திருக்க உதவும் முக்கியமான பொருள் தண்ணீர். தினமும் 2.7 லிட்டர் முதல் 3.7 லிட்டர் வரை தண்ணீர் குடித்தால், உடல் குளிர்ச்சியாகும். வெப்பம் சார்ந்த நோய்கள் ஏற்படாதபடி தடுக்க முடியும்.அந்த தண்ணீரில் கொஞ்சம் வெட்டிவேர் போட்டு குடிக்கும் போது உடம்புக்கு நல்ல புத்துணர்ச்சி கிடைக்கும்.முடிந்த அளவு ஃப்ரிட்ஜில் வைத்து குடிக்காமல் மண்பானை வாங்கி பயன்படுத்துங்க.
சின்ன வெங்காயம் பெரும்பாலான நோய்களை கட்டுப்படுத்தும் மருத்துவ குணம் இதற்கு உண்டு. சின்ன வெங்காயம் உடலை குளிர்ச்சியடைய செய்வது மட்டுமின்றி, வெயிலில் இருந்தும் பாதுகாக்கும். இதை சாப்பிடும் போது வெப்பம் சார்ந்த நோய்கள் குணமடையும்.பெரிய வெங்காயத்தை தவிர்த்துட்டு முடிஞ்ச அளவு சின்ன வெங்காயம் யூஸ் பண்ணுங்க
கோடை காலங்களில் தண்ணீர் குடித்து சலிப்பு ஏற்பட்டால், இளநீர் பருகலாம். இதில் இருக்கும் வைட்டமின் மற்றும் மினரல்கள் வெப்ப நோய்கள் வராமல் பாதுகாக்கும். கால்சியம், குளோரின், சோடியம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்த கற்றாழை அதிக நீர்ச்சத்து கொண்டது. கற்றாழை சாறை தொடர்ந்து பருகி வந்தால் உடல் வெப்பம் தணியும். வெப்பத்தால் ஏற்படும் சரும பாதிப்புகளை நீக்கவும் உதவுகிறது.
தண்ணீர் சத்து நிறைந்த காய்கறிகளை சாப்பிடுவதும் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும். கோடை காலங்களில் கீரை, புரோக்கோலி, காலிஃபிளவர் ஆகியவற்றை உணவுடன் அதிகளவில் சேர்த்துசாப்பிடலாம். தயிரை போலவே மோரும் உடல் வெப்பத்தை தணிக்கும் முக்கிய நீராகாரம். வெப்பத்தால் ஏற்படும் குடல் பிரச்னைகளுக்கு தீர்வு தரும்.