சீப் பப்ளிசிட்டிக்காக இப்படியா காமிக்கிறது? நடிகையை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.!
உங்க குழந்தையும் ஆல் ரவுண்டராகனுமா? இதை ஃபாலோ பண்ணுங்க!!

குழந்தை பிறந்த முதல் ஆயிரம் நாட்களில், அதன் மூளையில், ஒவ்வொரு நொடிக்கும் மில்லியனுக்கும் அதிகமான நரம்பியல் இணைப்புகள் உருவாகின்றன. அவை குழந்தையின் கற்றல் திறனை சிறப்பாக இயங்க செய்கிறது. இந்த சமயத்தில் குழந்தைகளுக்கு சிலவற்றை நாம் கற்றுக் கொடுப்பதன் மூலம், அவர்கள் எதிர்காலத்தில் அனைத்து விஷயங்களிலும் சிறந்தவர்களாக இருக்க இயலும்.
குழந்தைக்கு நல்ல ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கங்களை ஏற்படுத்திக் கொடுங்கள். வீட்டிற்கு வருபவர்களை உபசரிக்க கற்றுக் கொடுங்கள். வீட்டில் சிறுசிறு வேலைகளை பழக்குங்கள். தங்கள் உடைமைகளை சுத்தமாக வைத்து இருக்க சொல்லிக் கொடுங்கள்.
குட் டச், பேட் டச் சொல்லிக் கொடுங்கள். அடுத்தவர்களின் அனுமதி இன்றி, அவர்களின் கையை குலுக்குவது கூட தவறு என்பதையும் புரிய வையுங்கள். நல்ல புத்தகங்களை படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள்.
அடுத்தவர்களின் பொருள்களின் மேல் ஆசைப்படக் கூடாது என்பதை சொல்லிக் கொடுங்கள். யாரையும் உடலாலோ, மனதாலோ, சொல்லாலோ, செயலாலோ காயப்படுத்தக் கூடாது என்பதை உணர்த்துங்கள். இத்தனை பண்புகளும் இருப்பின், உங்கள் குழந்தையை நாளை உலகம் போற்றும்!!