மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தனிமையில் நெடுந்தூர பயணம் மேற்கொள்ள விரும்பும் பெண்களா நீங்கள்?..!
இன்றுள்ள நாட்களில் பலரும் தங்களின் தொலைதூர தனிமை பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களில் பெண்கள் தொலைதூர பயணம் செய்கையில் அதற்கான முன்னேற்பாடுகள் என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து காணலாம்.
பொதுவாக தொலைதூர பயணத்தில் தங்குமிடம், உணவு, பயண நாட்கள், சுற்றுலா செல்லும் இடங்கள் குறித்து முன்னதாகவே திட்டமிட்டு செயல்படுவது மனநிறைவான பயணத்தை ஏற்படுத்தும். இளம் தலைமுறை பெண்கள் தனிமை பயணத்தை மேற்கொள்வதால், அவர்கள் புதிய இடங்களை தெரிந்துகொள்ளும் வாய்ப்பு, வெளியுலக தொடர்பை மனதைரியதுடன் எதிர்கொள்ள வழிவகை செய்யும். சுதந்திர உணர்வு கிடைக்கும்.
பெண்ணொருவர் தனியே பயணம் செய்தால் பாதுகாப்பு விஷயம் மட்டுமல்லாது, அன்றாட தேவையையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். பயணத்தின் போது அத்தியாவசியமான பொருளை மறந்துவிட்டால், அது எதோ ஒரு இடத்தில் சிரமத்தை ஏற்படுத்தலாம். எவ்வுளவு நாட்கள், எவ்வுளவு தூரம் பயணம் செய்கிறோம் என்பதை பொறுத்து, அதற்கேற்றவாறு பேக்கை தேர்வு செய்ய வேண்டும்.
எடுத்துச்சென்ற பேக் முழுவதும் பொருட்களை வைக்காமல் சிறிதளவு இடம் விடும் பட்சத்தில், நாம் காணச்செல்லும் இடத்தில் பிரபலமாக இருக்கும் பொருட்களை வீட்டிற்கு வாங்கி வர இயலும். இன்று ஸ்மார்ட்போன் மூலமாக எங்கும் எளிதில் சென்றுவிடலாம் என்பதால் அதனை கவனத்துடன் பராமரிக்க வேண்டும், பேட்டரி பேக்கப் ரொம்ப முக்கியம்.
நீண்ட தூர பயணத்தின் போது மெல்லிசைகளை குறைந்தளவு ஒலி சத்தத்தில் வைத்து ஹெட்செட்டில் கேட்டு பயணம் செய்தால் அதன் மனநிறைவே தனித்துவமாக இருக்கும். பின்னால் வரும் வாகனம் ஹாரன் அடிக்கும் போது, அவர்களுக்கு வழிவிட்டு செல்லவும் உதவி செய்யும். பயணத்தில் எதிர்பாராத காயம் ஏற்பட்டால், முதலுதவி சிகிச்சை செய்ய மருத்துவ பொருட்களையும் வைக்கவேண்டியது அவசியம்.
சோப், டிசு பேப்பர், எண்ணெய், ஷாம்பு, நாப்கின், பற்பசை, பிரஸ், சீப்பு போன்றவற்றை மறந்துவிடக்கூடாது. தற்போது கொரோனா காலமாக இருப்பதால் முகக்கவசத்தை மறக்க கூடாது. ஒரு முகக்கவசத்திற்கு பதிலாக 2 அணியலாம். சானிடைசர் போன்றவற்றை உபயோகம் செய்யலாம். மேக்கப் கிட் தேவை என்றால் எடுத்துக்கொள்ளலாம்.
நாம் எடுத்து செல்லும் பையில் லக்கேஜ் ட்ராக்கரை வைத்திருந்தால், பைகள் காணாமல் போனால் அதனை எளிதில் கண்டறிந்துவிடலாம். உங்களின் சுய விபர அடையாள அட்டையின் நகலையும் வைத்திருக்க வேண்டும். ஆதார் கார்டு போன்றவை பி.வி.சி கார்டுகளாக வைத்திருப்பது நலம். இறுதியாக பயணம் இருசக்கர வாகனத்திலா? காரிலா? பொதுப்போக்குவரத்தா? என திட்டமிட்டு, அதற்கேற்ப செயல்பட வேண்டும்.
இருசக்கர வாகனம், கார் போன்ற சொந்த வாகனத்தில் பயணம் செய்தால், அதில் ஏற்படும் சிறு பழுதை தயார் செய்யும் குறைந்தபட்ச விஷயத்தை அறிந்திருக்க வேண்டும்.