திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மாதுளை ஜூஸை தொடர்ந்து 40 நாட்களுக்கு குடித்து வந்தால்.! என்னென்ன நன்மைகள் தெரியுமா.!?
பொதுவாக காய்கறிகள், பழங்கள் போன்றவற்றில் நம் உடலுக்கு தேவையான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் இருக்கிறது என்று பலரும் அறிந்ததே. அந்த வகையில் மாதுளம் பழத்தை ஜூஸ் ஆகவோ அல்லது அப்படியே சாப்பிட்டு வருவது உடலில் உள்ள பலவகையான நோய்களை குணப்படுத்தும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இந்த மாதுளை பழத்தை உணவில் சேர்த்துக் கொள்வதால் என்னென்ன நன்மைகள் என்பதை குறித்து பதிவில் பார்க்கலாம்
மாதுளம் பழத்தை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் நன்மைகள்
1. மாதுளை பழத்தை தொடர்ந்து 40 நாட்களுக்கு ஜூஸாக குடித்து வந்தால் பெண்களின் சீரற்ற மாதவிடாய் பிரச்சனை தீரும்.
2. கர்ப்பிணி பெண்கள் மாதுளை பழத்தை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளும் போது இரத்த சோகை பிரச்சனை ஏற்படாமல் பாதுகாக்கலாம்.
3. குழந்தைகளுக்கு மாதுளம் பழத்தை ஜுசாக தரும்போது அவர்களின் நினைவாற்றல் அதிகரிக்கும்.
4. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்குகிறது.
இதையும் படிங்க: 100% தீர்வு.! படுக்கையில் குதிரை பலம் பெற இதை கண்டிப்பாக ட்ரை பண்ணி பாருங்க.!?
5. சீதபேதியால் அவதிப்படுபவர்கள் மாதுளை பழத்தின் தோலை மிக்ஸியில் அரைத்து மோர் சேர்த்து குடித்து வந்தால் உடனடி தீர்வு கிடைக்கும்.
6. நாள்பட்ட வறட்டு இருமல் உள்ளவர்கள் மாதுளை பழச்சாறுடன் இஞ்சி சாறு மற்றும் தேன் கலந்து குடித்து வர உடனடி பலன் கிடைக்கும்.
7. உடல் சூடு பிரச்சனை இருப்பவர்கள், வயதானவர்கள் மாதுளை பழச்சாறு மற்றும் அருகம்புல் சாறு இரண்டையும் சம அளவு எடுத்து கலந்து குடித்து வந்தால் உடல் குளிர்ச்சி அடையும்.
8. சர்மம் தங்கம் போல் ஜொலிக்க மாதுளை பழச்சாறுடன் சந்தனம், தேன் இரண்டையும் கலந்து முகத்தில் பூசி பத்து நிமிடங்களுக்கு பின்பு கழுவி வந்தால் முகம் பளபளப்பாக இருக்கும். இதனால் மாதுளம் பழத்தை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நல்லது.
இதையும் படிங்க: சருமம் தங்கமாக ஜொலிக்க வெல்லத்தை இப்படி யூஸ் பண்ணி பாருங்க.!?