கடலை மிட்டாய் அதிகமாக சாப்பிடுவீங்களா.? உங்களுக்கு தான் இந்த பதிவு.!?

கடலை மிட்டாய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
பொதுவாக கடலை ஒரு நல்ல புரதம் நிறைந்த உணவு பொருளாக கருதப்படுகிறது. ஒரு சிலர் கடலை மிட்டாயாக தினமும் விரும்பி சாப்பிட்டு வருகின்றனர். இவ்வாறு தினமும் கடலைமிட்டாய் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் நன்மைகள் குறித்து இப்பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
1. புரதச் சத்துகள் (Proteins):
கடலை என்பது மிகுந்த புரதச் சத்து கொண்ட பொருளாகும். புரதம் உடலின் பல்வேறு செயற்பாடுகளுக்கான அடிப்படை பொருளாக செயல்படுகிறது, குறிப்பாக தசை வளர்ச்சி, மற்றும் உடலை ஆரோக்கியமாக பராமரிப்பது போன்றவைக்கு இந்த புரதம் மிகவும் அவசியம்.
2. ஆரோக்கியமான கொழுப்புகள் (Healthy Fats): கடலை மிட்டாயிலில் உடலுக்கு தேவையான மிகவும் நல்ல கொழுப்புக்கள் உள்ளது. இவை கெட்ட கொழுப்பின் அளவை குறைக்க உதவுகின்றன. இதனால் இதய நோய்கள் மற்றும் இரத்தகுழாய் பாதிப்புகளைத் தவிர்க்க உதவுகிறது. மேலும், இந்த கொழுப்புக்கள் மூளை மற்றும் சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.
3. ஆற்றல் அதிகரிப்பு (Energy Boost):
கடலை மிட்டாயில் உள்ள சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உடலுக்கு தேவையான உடனடி ஆற்றலை வழங்குகின்றன. இது உடல் சோர்வு அல்லது அதீத பசி போன்ற உணர்வுகளை குறைக்க உதவுகிறது. உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் உடற்பயிற்சி செய்பவர்கள் கடலை மிட்டாயை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
4. வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் (Vitamins and Minerals):
கடலை மிட்டாயல் வைட்டமின் ஈ, வைட்டமின் பி3, வைட்டமின் பி9, மெக்னீசியம் இரும்புச்சத்து போன்றவைகள் உள்ளது.
இதையும் படிங்க: குளிர்கால சளி, காய்ச்சலால் அவதிப்படுறீங்களா.? இந்த கசாயத்தை குடித்து பாருங்க.!?
5. பசியின்மை - கடலை மிட்டாயில் உள்ள அதிகப்படியான புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து அடிக்கடி பசி ஏற்படுவதையும், வயிற்றில் கெட்ட கொழுப்புகள் தேங்குவதையும் தடுக்கிறது. எனவே உடற்பயிற்சி செய்பவர்கள், உடல் எடை குறைக்க விரும்புபவர்கள், கடலை மிட்டாய்யை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
6 மன அழுத்தம் - கடலை மிட்டாயில் உள்ள கொழுப்புகள், புரதம், நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் செரோட்டோனின் என்ற ரசாயனத்தின் அளவை அதிகரிக்க உதவுகிறது. இது மன அழுத்தத்தை குறைக்கவும், மனநலத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
இதையும் படிங்க: 60 வயதிலும் துள்ளி குதிக்க வைக்கும் இயற்கை மூலிகை.! வேறு என்னென்ன நன்மைகள் தரும்.!?