குப்பைமேனி இலையில் கொட்டி கிடக்கும் மருத்துவ நன்மைகள்? வாங்க தெரிஞ்சுக்கலாம்!



Health benefits of kuppaimeni leaf

குப்பைமேடுகளில் எளிதாக கிடைக்கும் அரிய வகை மூலிகை குப்பைமேனி. இதில் எண்ணற்ற மருத்துவ நன்மைகள் நிறைந்துள்ளது. அந்த வகையில் சிரங்கு, சொறி, அரிப்பு போன்ற தோல் நோய் இருந்தால் அதனை குணப்படுத்த குப்பைமேனி இலை போதும் என கூறப்படுகிறது.

Kuppaimeni leaf

இது போன்ற தோல் சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்கள் குப்பைமேனி இலையுடன் மஞ்சள் மற்றும் கல் உப்பு சேர்த்து நன்றாக அரைத்து நன்றாக கழுவி வந்தால் அனைத்து தோல் வியாதிகளும் குணமாகும் என கூறப்படுகிறது.

குறிப்பாக சொத்தைப்பல் உள்ளவர்கள் பல்லில் வலி இருந்தால் இரண்டு அல்லது மூன்று குப்பைமேனி இலைகளை நன்றாக கழுவி நசுக்கி பள்ளி வைத்தால் சொத்தை பல்லில் உள்ள கிருமிகள் வெளியேறி வலி நீங்கும் என கூறப்படுகிறது.

Kuppaimeni leaf

அதேபோல் தேள், பூரான் போன்ற விஷ பூச்சிகள் கடித்தால் கடித்த இடத்தில் குப்பைமேனி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து பூசினால் விஷம் முறிந்து விடும் என கூறப்படுகிறது.