கோடை வெயிலை குளிர்ச்சியுடன் சமாளிக்க வேண்டுமா? எளிய பானங்கள் இதோ!



Health benefits of summer season juice

தற்போது கோடை வெயில் கொளுத்த தொடங்கி விட்ட நிலையில், வெயிலில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளக் கூடிய பானங்கள் குறித்து இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம். வெயில் காலத்தில் குறிப்பாக வழக்கத்திற்கு அதிகமாக அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும்.

summer

ஏனென்றால் வெயில் காலத்தில் உடல் சூடு அதிகமாக இருக்கும் என்பதால், தண்ணீர் நிறைய குடித்தால் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும். அதேபோல் மண்பாண்டத்தில் வைக்கப்படும் குடிநீர் பருகுவதால் உடல் இன்னும் குளிர்ச்சியாக இருக்கும்.

வெட்டிவேர் குடிப்பதால் உடன் சூடு குறைந்து தாகத்தை தணிக்கும். அதேபோல் சிறுநீர் குடிப்பது செரிமானத்தை மேம்படுத்தி, உடல் சூட்டை குறைக்கும். வெந்தய நீர் குடிப்பதால் உடல் சூட்டை குறைத்து, சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவும்.

கருப்பட்டி நீர் குடிப்பதால் உடலை ஈரப்பதமாக வைத்து, உடல் சூட்டை குறைக்கும். அதே போல் எலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுத்து, தாகத்தை தீர்க்கும்.

summer

தர்பூசணி ஜூஸ் குடிப்பதால் உடலை குளிர்ச்சியாக  வைத்துக் கொள்ள உதவுகிறது. கொய்யா ஜூஸ் குடிப்பதால் உடல் சூட்டை குறைத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

மேலும், வெயில் காலத்தில் உடல் சூட்டை குறைக்க இளநீர், மோர் மற்றும் கற்றலை ஜூஸ் குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது.