மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தாய்மார்கள் கவனத்திற்கு... தாய்பால் சுரப்பை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா!!
இன்று பெரும்பாலான தாய்மார்களுக்கு தாய் பால் சுரப்பு என்பது குறைந்து வருகிறது. இதனால் குழந்தை பிறந்த 5 மாதத்திலிருந்தே பசும் பால் கொடுக்க ஆரம்பித்து விடுகின்றனர். இந்த பிரச்சினைக்கு சிறந்த தீர்வு என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
தாய்மார்கள் முடிந்த வரை குழந்தைக்கு அடிக்கடி தாய்பால் கொடுக்க வேண்டும். அப்படி அடிக்கடி தாய்பால் கொடுக்கும் பொழுது தான் மார்பகங்கள் ஹார்மோன்களை வெளியிடுகின்றன. இந்த ஹார்மோன்கள் தான் தாய்பால் சுரப்பை அதிகரிக்கும்.
தாய்பால் கொடுக்கும் தாய்மார்கள் அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். ஏனெனில் தாய்ப்பாலில் அதிக அளவு நீர்ச்சத்து உள்ளது எனவே தாய்மார்கள் ஒரு நாளைக்கு 2 முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். அதிக அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பதும் தாய்பால் சுரப்பை குறைவுக்கு காரணமாகும்.
எனவே ஒவ்வொரு முறை தாய்பால் கொடுத்த பிறகும் தண்ணீர் குடிப்பது நல்லது. எப்போது உடலை நீரோட்டமாக வைத்து கொள்வதன் மூலம் தாய்பால் சுரப்பை மேம்படுத்தலாம்.