தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
அசத்தல் சுவையில், சத்து மிகுந்த முடக்கத்தான் கீரை தோசை செய்து பாருங்கள்.!
கை கால்கள் முடங்கிப் போய்விடாமல் தடுக்க கூடிய வல்லமை பெற்றதால், இதனை முடக்கு அறுத்தான் கீரை என்று கூறுவார்கள். அது நாளடைவில் மருவி முடக்கத்தான் என்றானது. முடக்கத்தான் கீரை பயன்படுத்துவதால் நரம்பு தளர்ச்சி நீங்குவதுடன், நரம்புகள் வலிமை பெறுகின்றன. கழுத்து வலி, மூட்டு வலி, இடுப்பு வலிக்கும் சிறந்த தீர்வாக முடக்கத்தான் கீரை அமைகிறது.
கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், மாதவிடாய் கோளாறுகள், குடலிறக்க நோய், வாத கோளாறுகள் போன்றவற்றையும் சரி செய்கிறது. இந்தக் கீரையை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளும் போது, புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் குறையும். சிறிது கசப்பு சுவையுடைய இக்கீரையை, துளியும் கசப்பு தெரியாமல் தோசையாக செய்வது எப்படி என இப்போது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி - 1 கப்
முடக்கத்தான் கீரை -1 கைப்பிடி
வர மிளகாய் - 3
சீரகம் - 1தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் / சின்ன வெங்காயம் -1/2 கப்
செய்முறை:
அரிசியை நன்றாக கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு ஊற வைத்த அரிசியுடன், கழுவிய முடக்கத்தான் கீரை, வர மிளகாய், சீரகம் மற்றும் உப்பு சேர்த்து மிக்சியில் கொரகொரப்பாக அரைக்கவும். இதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து தோசையாக சுடவும். இதனை அரைத்த உடனேயே பயன்படுத்தலாம். இதை ஃப்ரிட்ஜில் வைத்து உபயோகிக்கும் போது மேலே வழவழப்பான நீர் தேங்கும். மொறு மொறுவென்று முடக்கத்தான் தோசையை சுட விரும்பினால், அந்த நீரை கீழே ஊற்றிவிட்டு தோசை வார்க்கலாம். அந்த நீரையும் அப்படியே கலந்து தோசை சுடும்போது தோசை மென்மையாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, அனைவரும் இதை விரும்பி உண்பார்கள் இதற்கு தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி, தக்காளி சட்னி அல்லது இட்லி பொடி பொருத்தமாக இருக்கும்.