மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சில நிமிடங்களிலேயே சளி கரைந்து வெளியேற, இந்த மூலிகை டீ செய்து குடித்து பாருங்க.!?
பொதுவாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கும் சாதரணநோய் தான் சளி, காய்ச்சல், இருமல் போன்றவை. இது உடலில் நோய் எதிர்ப்பு குறைவு, பாக்டீரியா மற்றும் வைரஸ் தாக்குதலால் ஏற்படுகிறது. இவ்வாறு இந்த சளி பாதிப்பு நம் உடலில் வந்துவிட்டாலே மிகவும் அசௌகரியமாகி விடுகிறது.
மேலும் இதனால் இருமல், தலைவலி, மூச்சு விட சிரமம், மூக்கில் நீர் வடிதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்த பாதிப்பிற்கு வீட்டில் உள்ள ஒரு சில பொருட்களை வைத்து தேநீர் தயாரித்துக் குடிப்பதன் மூலம் சளி பாதிப்பில் இருந்து எளிதாக விடுபடலாம். இந்த மருத்துவ குணங்கள் நிறைந்த தேநீர் எவ்வாறு செய்யலாம் என்பதை இப்படி பார்க்கலாம்?
தேவையான பொருட்கள்
இஞ்சி
பட்டை
இலவங்கம்
ஏலக்காய்
மிளகு
நாட்டு சர்க்கரை
டீ தூள்
பால்
துளசி
செய்முறை
முதலில் சிறு துண்டு இஞ்சி, 2 ஏலக்காய், சிறிது மிளகு, லவங்கம், பட்டை, துளசி போன்றவற்றை நன்றாக இடித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி எடுத்து வைத்த மசாலா பொருட்களை சேர்த்து அரை கிளாஸ் வரும் அளவிற்கு தண்ணீர் கொதிக்க விடவும்.
பின்னர் அந்த பாத்திரத்தில் பால் மற்றும் தேவையான அளவு நாட்டு சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்து இறக்கினால் சூடான, சுவையான மற்றும் மருத்துவ குணம் மிகுந்த தேநீர் தயார். இந்த தேநீரை தினமும் காலையில் குடித்து வந்தால் உடலில் உள்ள சளி தொல்லை சில நிமிடங்களிலேயே நீங்கிவிடும்.