மாரடைப்பு ஏற்படாமல் தடுக்க இந்த விஷயத்தை பண்ணுங்க.!



How to avoid heart attack

பொதுவாக நம் உடலில் நல்ல கொலஸ்ட்ரால் மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் என்று இரண்டு வகையான கொலஸ்ட்ரால்கள் உள்ளன. இதில் கெட்ட கொலஸ்ட்ரால் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும். எனவே இதை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் முக்கியமாகும்.

Health

இதற்கு ஆயுர்வேதத்தில் ஒரு தீர்வு உள்ளது. அர்ஜுனா மரத்தின் உட்புறத்தில் இருக்கும் பட்டை ஆயுர்வேத மருத்துவத்தில் இதயம் உட்பட பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வாக பயன்படுத்தப்படுகிறது. இந்தப் பட்டையைக் கொண்டு தயாரிக்கப்படும் டீயை பருகுவதால் பல நன்மைகள் ஏற்படுகின்றன.

இது இதய தமனிகளின் அடைப்பைக் குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது. ரத்த நாளங்களை தளர்த்தவும், ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது. மேலும் ரத்த ஓட்டத்திற்கான எதிர்ப்பைக் குறைக்கிறது. இதில் ட்ரைகிளிசரைடுகள் அதிகம் நிறைந்துள்ளன.

Health

மேலும் அர்ஜுனா பட்டையில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. எனவே இவற்றை உட்கொண்டால் இதய அமைப்பில் உள்ள வீக்கத்தைக் குறைக்கும். மேலும் இந்த அர்ஜுனா பட்டை இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கக் கூடியதாக உள்ளது.