மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"குளிர் காலத்தில் சூடான நீரில் தலைக்கு குளித்தால் இப்படித்தான் ஆகும்!" கவனம் தேவை!
பொதுவாக கோடைகாலத்தில் தண்ணீரில் குளிக்கும் நாம், குளிர் காலத்தில் தண்ணீரில் குளிப்பதை தவிர்த்து வெந்நீர் வைத்து தான் குளிப்போம். அதற்கு காரணம் குளிரும், தண்ணீர் மிகவும் ஜில்லென்று இருப்பதுமே ஆகும். எனவே குளிருக்கு சூடாக வெந்நீரில் குளித்தால் மிகவும் இதமாக இருக்கும்.
அதேபோல் தலைக்கு குளிக்கும்போதும் வெந்நீரில் குளிப்போம். ஆனால் வெந்நீரில் தலைக்கு குளிப்பது தீமைகளைத் தான் ஏற்படுத்தும். தலைக்கு ஷாம்பூ போட்டு வெந்நீரில் குளித்தால் தலை முடி பலவீனமாகி உதிர ஆரம்பித்துவிடும்.
மேலும் சூடான நீர் தலைமுடியின் வேர்க்கால்களை திறப்பதால், முடி வேர்களில் இருந்து வெளியேற ஆரம்பிக்கிறது. எனவே நாம் வெந்நீரில் தலைக்கு குளிக்க கூடாது. அதே சமயம் குளிந்த நீரில் குளிப்பதும் உடலுக்கு உகந்ததல்ல.
குளிர் காலத்தில் குளிர் நீரில் குளிப்பது மேலும் நம்மை நோய்வாய்ப்படுத்தும். எனவே குளிர்ந்த நீரும் இல்லாமல், சூடான நீரும் இல்லாமல் வெதுவெதுப்பான நீரில் தான் தலைக்கு குளிக்க வேண்டும். கோடை காலம், குளிர் காலம் என எல்லா காலத்திலும் வெதுவெதுப்பான நீரில் குளிப்பதே தலைமுடிக்கு நல்லது.