"அய்யோ திருமணமா.?! எப்பவுமே இல்ல" பொன்னியின் செல்வன் நடிகை.. பகீர் அறிவிப்பு.!
CLEANING TIPS : பாத்ரூமில் உள்ள டைல்ஸ் அழுக்குகளை எளிதாக நீக்குவது எப்படி.!?
பாத்ரூம் டைல்ஸ் களை எவ்வாறு சுத்தம் செய்யலாம்
"சுத்தம் சோறு போடும்" என்ற பழமொழிக்கேற்ப நாம் இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். குறிப்பாக நாம் நம் வீட்டை எவ்வாறு சுத்தமாக வைத்துக் கொள்கிறோமோ, அந்த அளவிற்கு வீட்டில் உள்ள குளியலறை, கழிப்பறைகளையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு சுத்தமாக வைத்துக் கொள்வதால் நோய் கிருமிகள் நம் உடலை தாக்காமல் பாதுகாக்கும்.
தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் பலரது வீட்டிலுமே உள்ள குளியலறை மற்றும் கழிப்பறைகளில் டைல்ஸ் மற்றும் சுவர்களில் உப்பு தண்ணீர் கறை, அழுக்குகள் என அதிகமாக காணப்படுகிறது. இந்த கறைகள் மற்றும் அழுக்குகளை எவ்வாறு எளிதாக நீக்கலாம் என்பதை குறித்து இப்பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
இதையும் படிங்க: தினமும் ஒரு டம்ளர் இதை குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள நச்சுக்களை எளிதாக வெளியேற்றலாம்.!?
டைல்ஸ்கள் மற்றும் சுவர்களை சுத்தம் செய்யும் முறைகள்
வினிகர்
மற்றும் பேக்கிங் சோடா : வெதுவெதுப்பான தண்ணீரில் வினிகர் மற்றும் பேக்கிங் சோடா கலந்து டைல்ஸ்கள் மற்றும் உப்பு தண்ணீர் கறைபடிந்த இடங்களில் தெளித்துவிட்டு ஐந்து நிமிடம் கழித்து தேய்த்தால் அழுக்குகள் நீங்கி பளபளப்பாகும்.ஹைட்ரஜன் பெராக்ஸைடு : ஹைட்ரஜன் பெராக்ஸைடை அழுக்குகள் படிந்த இடத்தில் தேய்த்து வந்தால் அழுக்குகள் நீங்கும் அல்லது பேக்கிங் சோடாவுடன் ஹைட்ரஜன் பெராக்சைடு கலந்து பேஸ்ட் போல் செய்து கறைகள் உள்ள இடத்தில் தேய்த்து சில நேரம் கழித்து கழுவினால் அழுக்குகள் நீங்கிவிடும்.
ப்ளீச்
மற்றும் எலுமிச்சை சாறு - டைல்ஸ்களில் தேங்கியிருக்கும் மஞ்சள் நிற கரைகள் உப்பு கறைகளை எளிதாக நீக்க ப்ளீச் மற்றும் எலுமிச்சை சாறு கலந்த கலவையை தேய்த்து கழுவினால் எளிதாக நீங்கிவிடும். மேலே குறிப்பிட்ட முறைகளை பாத்ரூம் டைல்ஸ்களில் மட்டுமல்லாது சமையலறையிலும் உபயோகப்படுத்தி வீட்டை சுத்தமாக வைத்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: இளம் வயதிலேயே முடி உதிர்வு பிரச்சனையா.! தலையில் வழுக்கை விழாமல் இருக்க இதை ட்ரை பண்ணி பாருங்க.!?