இளம் வயதிலேயே முடி உதிர்வு பிரச்சனையா.! தலையில் வழுக்கை விழாமல் இருக்க இதை ட்ரை பண்ணி பாருங்க.!?



Hair growth tips for mens

இளம் வயதினருக்கு ஏற்படும் முடி உதிர்வு பிரச்சனை

தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் ஊட்டச்சத்து இல்லாத உணவு பழக்கங்களினால் பலரும் பல விதமான நோய் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக ஆண்களுக்கு தலைமுடி உதிர்வு பிரச்சனை அதிகமாகி வருகிறது. அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையினாலும், ஊட்டச்சத்து இல்லாத உணவு பழக்கங்களினாலும் பெண்களை விட ஆண்களுக்கு தலைமுடி பிரச்சனை அதிகமாக உள்ளது.

Hair Growth

நம் தாத்தா, பாட்டி காலத்தில் 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே வழுக்கை விழும். ஆனால் தற்போது 20 வயது முதல் உள்ள ஆண்களுக்கு தலைமுடி உதிர்வு அதிகமடைந்து வழுக்கை தலை பிரச்சனையால் அவதியுறுகின்றனர். இவ்வாறு தலைமுடி உதிர்வு அதிகம் அடையாமல் இருப்பதற்கும் வழுக்கை விழாமல் இருப்பதற்கும் கீழே குறிப்பிட்ட மருத்துவ குறிப்புகளை பின்பற்றி பயனடையலாம்.

இதையும் படிங்க: தலைக்கு எண்ணெய் வைக்க போறிங்களா.? இதை முதலில் தெரிஞ்சிக்கோங்க.!

குறிப்பு

1

தேவையான

பொருட்கள்:-

வடித்து ஆறவைத்த கஞ்சி,
கற்றாழை ஜெல்,
சின்ன வெங்காயம்,
செம்பருத்தி இதழ்,
செம்பருத்தி இலை

செய்முறை

ஒரு மிக்ஸி ஜாரில் கற்றாழை ஜெல், சின்ன வெங்காயம், செம்பருத்தி இதழ், செம்பருத்தி இலை போன்றவற்றை சேர்த்து நன்றாக அரைத்து குளிக்க செல்வதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாக தலையில் தேய்த்து ஊற வைத்துக் கொள்ளவும். பின்னர் வடித்து ஆற வைத்த கஞ்சியை தலையில் தேய்த்து ஐந்து நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும். இவ்வாறு வாரம் இரு முறை குளித்து வந்தால் தலைமுடி உதிர்வு பிரச்சினை குறையும்.

குறிப்பு

Hair Growth 2

தேவையான

பொருட்கள்:-வைட்டமின் ஈ மாத்திரை,
தேங்காய் எண்ணெய்

செய்முறை

:-ஒரு கிண்ணத்தில் தேவையான அளவு தேங்காய் எண்ணெய் மற்றும் வைட்டமின் ஈ மாத்திரை சேர்த்து இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு தலையில் தேய்த்துக் கொள்ளவும். முடியின் வேர்களில் படும்படி நன்றாக மசாஜ் செய்து விட்டு காலையில் எழுந்து குளித்தால் முடி உதிர்வு பிரச்சினை நீங்குவதோடு, வழுக்கை தலையிலும் முடி வளரும்.

இதையும் படிங்க: நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவும் பீர்க்கங்காய்.! வேறு என்னென்ன நன்மைகள் உள்ளது தெரியுமா.!?