#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
உப்பு கறை படிந்த பாத்திரத்தை 10 நிமிடத்தில் பளபளனு மாற்றுவது எப்படி... அருமையான டிப்ஸ்...
உங்கள் வீட்டில் வெகு நாட்களாக உப்பு கறை படிந்து மிக மோசமாக உள்ள பாத்திரத்தை இந்த மூன்று பொருளை மட்டும் பயன்படுத்தி மிக எளிதாக சுத்தம் செய்து விடலாம். உப்பு கறை படிந்து இருக்கக்கூடிய இந்த பாத்திரங்களை மிக மிக சுலபமான முறையில் குறைந்த செலவில் கை வலிக்காமல் பத்தி நிமிடத்தில் சுத்தம் செய்வது எப்படி என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.
நாம் துணி துவைக்க பயன்படுத்தக்கூடிய எந்த சோப்பையும் எடுத்து கொள்ளுங்கள். அதனை நன்றாக துருவி கொள்ளுங்கள். பின்னர் துருவிய சோப்பு தூளிலிருந்து 1 டேபிள் ஸ்பூன் எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளவும். அதனுடன் 1 டீ ஸ்பூன் ஹேர்பிக்கை ஊற்றி நன்றாக கலக்க வேண்டும்.
இந்த கலவையை உப்பு கறை படிந்த பாத்திரத்திற்கு உள்ளே நன்றாக தடவி விட்டு விடுங்கள். பின்பு அதன் மேலே சாம்பலை தூவி ஒரு 10 நிமிடம் அப்படியே ஊற விட வேண்டும். 10 நிமிடம் கழித்து ஒரு நாரை கொண்டு தேய்த்தால் பாத்திரம் பளபளனு மாறி விடும்.