மழைக்கால நோய்களை தடுப்பது எப்படி.? இதோ எளிய வழிமுறைகள்.!
சாதாரணமாகவே வெயில் காலம் முடிந்து மழைக்காலம் தொடங்கினால் பலருக்கும் பல்வேறு விதமான நோய்த்தொற்றுகள் ஏற்படுவது வழக்கம்தான். ஆனால் இவ்வாறு ஏற்படும் சளி, இருமல், ஜலதோஷம் போன்ற மழைக்கால நோய் தொற்றுகளை எளிதாக குணப்படுத்த முடியும்.
அந்த வகையில் மழைக்காலத்தில் ஏற்படும் சளி, இருமல், ஜலதோஷம், இருமல் போன்ற நோய் தொற்றுகளை நாம் உண்ணும் உணவும் உணவின் மூலம் எவ்வாறு குணப்படுத்தலாம் என்பது குறித்து இந்த பதிவில் நாம் காணலாம்.
குறிப்பாக மழைக்காலங்களில் எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவுகளை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. அதேபோல் சத்து நிறைந்த காய்கறி மற்றும் பழங்களை சாப்பிடுவதன் மூலம் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதால் சளி, இருமல் மற்றும் வைரஸ் காய்ச்சல் போன்ற நோய் தொற்றுகள் நம்மை தாக்காது. அதையும் மீறி வந்தால் நமது உடல் அதனை எளிதில் குணப்படுத்தி விடும்.
அவ்வாறு நோய் தொற்று ஏற்பட்டால் ஏலக்காய், மிளகு, கிராம்பு, வெற்றிலை, தேன் ஆகியவற்றை எடுத்து பீடா போன்று மடித்து சாப்பிட வேண்டும் அவ்வாறு சாப்பிடுவதால் சளி இருமல் போன்றவை குணமாகும்.