ஷிவ்ராஜ்குமாரின் மிரட்டல் லுக்.. 45 படத்தின் அலறவைக்கும் டீசர்.!
வயிற்றில் உள்ள பூச்சிகளை வெளியேற்ற வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்!

வயிற்றில் அதிகமாக பூச்சிகள் ஏற்பட்டால் மணலிக்கீரை அல்லது நவமல்லி கீரையை சாப்பிட வேண்டும் என நமது முன்னோர்கள் அறிவுறுத்துகின்றனர். மணலிக்கீரை உணவுக்கு ஏற்ற கீரைகளில் ஒன்று எனவும் இதன் இலை மற்றும் தண்டு அதிக மருத்துவ குணம் கொண்டது.
வயிற்றில் பூச்சி இருந்தால் மணலி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் உடனடியாக பூச்சிகளை அழித்து வெளியேற்றும் தன்மையை கொண்டுள்ளது. எனவே தான் அந்த காலங்களில் நமது முன்னோர்கள் மருத்துவரை அணுகாமல் எந்த கீரையை அதிக அளவில் பயன்படுத்தி உள்ளனர்.
மணலிக்கீரை மலச்சிக்கலை போக்கும் தன்மை உடையது. மேலும் இந்த கீரையை பாசிப்பருப்புடன் கலந்து சாப்பிட்டு வந்தால் மார்பு சளி எளிதில் குணமாகும்.
குறிப்பாக மூளை பாதிப்பு உள்ள குழந்தைகளுக்கு இந்த கீரையை தொடர்ந்து உணவில் கொடுத்து வந்தால் மூளை நரம்புகள் புத்துணர்ச்சியுடன் நன்கு வேலை செய்யும் என கூறப்படுகிறது.