96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
தனியார் பள்ளியில் படிக்கும் பிள்ளைகள் சேட்டை செய்வதை கண்டுபிடிப்பது எப்படி.? அதனை மிஸ் கூட சொல்ல மாட்டார்கள்.!
தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து கொண்டே வருகின்றது. தனியார் பள்ளியில் படித்தால் மட்டும் தான் கல்வி அறிவு பெற முடியும், ஒழுக்கம் உள்ள மாணவர்களாக வர முடியும் என்பது போன்ற பிம்பம் உருவாக்கப்பட்டு வறுமையில் வாடும் ஏழை பெற்றோர்கள் கூட கடன் வாங்கி தங்களது பிள்ளைகளை தனியார் பள்ளியில் சேர்க்கும் நிலை உருவாகிவருகின்றது.
ஆனால் தற்போது தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் செலுத்துவதற்கு வசதி படைத்தவர்கள் கூட செலுத்த முடியாத அளவிற்கு கல்வி கட்டணம் உயர்ந்துள்ளது. பிள்ளைகளின் பள்ளிக்கூட கட்டணத்திற்க்காவே தற்போது பெற்றோர்கள் உழைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. தங்களது பிள்ளைகளை குறிப்பிட்ட பள்ளியில் படிக்கவைக்க வேண்டும் என்பதற்காகவே இருப்பிடத்தை மாற்றும் பெற்றோர்களும் தற்போது இருந்து வருகின்றனர்.
தனியார் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளின் பெற்றோர்கள் அவர்களது ஆசிரியர், ஆசிரியைகளிடம் தங்களது குழந்தை எப்படி படிக்கிறது என்று கேட்டால் மிகவும் அருமையாக படிக்கிறார்கள் என்று தான் கூறுவார்கள். அவர்கள் செய்யும் சேட்டைகளை கூட சொல்ல மறுத்து வருகிறார்கள். அதற்கு காரணம் பிள்ளைகளை வேறு பள்ளிகளில் சேர்த்து விடுவார்களோ என்ற பயம். அதேபோல் பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் குழந்தைகளிடம் நீங்கள் ஏதாவது சேட்டை செய்தீர்களா என்று கேட்டால் நாங்கள் எதுவும் செய்யவில்லை என்று தான் கூறுவார்கள். ஆனால் உங்க டீச்சருக்கு போன் பண்ணவா என்று கேட்டால் நடந்த அத்தனை விசயத்தையும் கூறிவிடுவார்கள்.