மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஐயோ புது துணி உடனே மங்கலாகுதேன்னு கவலையா? கவலைய விடுங்க இத ட்ரை பண்ணுங்க!
ஒவ்வொரு துணியையும் அலசுவதுக்கு முன் அதன் பராமரிப்பு முறைகளை, துணிகளில் ஒட்டப்பட்டு இருக்கும் லேபில்களில் பார்த்து படித்து கொண்டு செய்தால் துணிகளின் ஆயுள் காலத்தை நீடிக்கலாம்.
‘ஆள் பாதி, ஆடை பாதி’ என ஒரு பழமொழி இருப்பதை நாம் அனைவரும் அறிந்ததே. மேலும், ‘ஆடையில்லா மனிதன் அரைமனிதன்’ என நமது முன்னோர்கள் ஆடைகளின் முக்கியத்துவம் பற்றி பல தத்துவங்களை நமக்கு தந்துள்ளார்.
ஒருவரின் தன்னம்பிக்கை அதிகரிப்பதற்கும், மற்றவர்களிடம் இருந்து அவர்கள் வேறுபடுத்தி காண்பிப்பதற்கும் ஆடைகள் மூக்கை பங்கு வகிக்கின்றன. இந்த காலத்தில் மனிதர்கள் ஒருவரின் ஆடைகளை பார்த்தே அவர்களது தகுதியை நிர்ணயித்துவிடுவார்கள். ஆகையால் தான் தற்போதைய சூழ்நிலையில், சிறியவர் முதல் பெரியவர்கள் வரை ஆடைகளை வாங்கும் விசயத்தில் அதிக அளவு முக்கியத்துவம் அளிக்கின்றனர்.
இந்த அளவுக்கு முக்கியத்துவமுள்ள ஆடைகளை நாம் வாங்குவதற்கு எவ்ளவு முக்கியத்துவம் தருகிறோமோ அத அளவு முக்கியத்துவம் வாங்கியபிறகு அவற்றை துவைப்பதில் தருகிறோமா என்றால் நிச்சயம் இல்லை.
ஒவொரு துணிகளையும் எவாறு துவைக்கவேண்டும், எவாறு உலர வைக்கவேண்டும் என்பதை துணியில் உள்ள ஸ்டிக்கரில் படித்து அதன்படி செயல்படுவது நல்லது. அவ்வாறு முறைப்படி செயல்படும்போது துணியின் நிறம் காக்க படுகிறது.
வினிகர்
1 கப் வினிகர் இருந்தால் உங்கள் துணியின் நிறம் காக்க பட்டு புதிதுபோல ஜொலிக்கவைக்கலாம். குளிர்ந்தநீர், டிடர்ஜென்ட் எதுவும் இல்லாமலே உங்கள் துணியின் நிறம் பாதிக்கப்படுகிறது. ஒரு கப் வினிகரில் துவைத்த துணியை அலசுங்கள். அப்புறம் பாருங்கள் வித்தியாசத்தை.
உப்பு நீர் அலசல்
ஒரு பாக்கெட்டில் நீர் நிரப்பி அதில் ஒரு கை அளவு உப்பை கரைத்துக்கொள்ளுங்கள். அதில் உங்கள் துணியை ஊறவைத்து டிடர்ஜென்ட் கொண்டு துவைத்து குளிர்ந்த நீரில் அலசுங்கள். உங்கள் துணியின் நிறம் ஜொலிக்கும்.
திருப்பி போடுதல்
துணியை பின்புறமாக திருப்பி துவையுங்கள். அவ்வாறு செய்வதன்மூலம் துணிகள் மங்குவதை தடுக்க இயலும்.
கைகளை பயன்படுத்துதல்
சூடான நீரில் உங்கள் கைகளைக் கொண்டு ஆடைகளை துவைப்பது நல்லது. 15 நிமிடங்கள் குளிர்ந்த நீரில் மைல்டு டிடர்ஜெண்ட் சேர்த்து 10 நிமிடங்கள் அலசி மிதமான வெயிலில் காய வைத்தால் போதும். இதனால் ஆடைகளின் நிறம் மங்காது.
வெப்ப நிலை
சூடான வெப்பநிலை ஆடையிழைகளின் தன்மையை பாதிப்படைய செய்யும். எனவே எப்பொழுதும் குளிர்ந்த நீரில் அலசுவது நல்லது.
ஸ்டார்ச் போன்ற கெமிக்கல்கள் பயன்படுத்தி உங்கள் ஆடைகளை சலவை செய்யும் போது அதனால் ஆடைகள் பாதிப்படைய வாய்ப்புள்ளது. எனவே இந்த மாதிரியான கெமிக்கல்களை தவிர்ப்பது நல்லது.