#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தக்காளி,வெங்காயம் இல்லாமல் சட்னி செய்வது எப்படி...
தாறுமாறாக ஏறி இருக்கும் தக்காளி,வெங்காயம் விலை உயர்வால் தினந்தோறும் சட்னிக்கு தக்காளி சேர்ப்பது என்பது முடியாத காரியமாகயுள்ளது. எனவே தக்காளி, வெங்காயம் இல்லாமல் சுவையான சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
உளுத்தம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்,
வர மிளகாய் – 4,
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி அளவு,
புளி – ஒரு சிறு நெல்லிக்காய் அளவு,
உப்பு – தேவைக்கு ஏற்ப,
தேங்காய் துருவல் – அரை கப்,
பூண்டு – 2,
தாளிக்க:
கடுகு – கால் டீஸ்பூன், உளுந்து – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, வர மிளகாய் – 1
முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் வாணலியை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் அதில் உளுந்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும். உளுந்து நன்கு வறுபட்டதும் அதனுடன் 4 வரமிளகாய், கறிவேப்பிலை, 2 பல் பூண்டு, புளி, தேங்காய் துருவல் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
பின்னர் அடுப்பை அணைத்து ஆற விட்டு விட வேண்டியது தான்.இந்த பொருட்களெல்லாம் நன்கு ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் மாற்றி நன்கு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் தளிப்பிற்கு கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு போட்டு பொரிய விடுங்கள்.
கடுகு பொரிந்ததும் கறிவேப்பிலை, உளுந்தம் பருப்பு சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கி, ஒரு வர மிளகாயை கிள்ளி சேர்த்து தாளித்து சட்னியில் கொட்டி சுடச்சுட இட்லி, தோசையுடன் பரிமாற வேண்டியது தான்.