திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கொழுப்புகளை கரைக்கும் கொள்ளு மசாலா செய்வது எப்படி?.. தாய்மார்களே தெரிஞ்சிக்கோங்க.!
நமது உடலில் இருக்கும் தேவையில்லாத கொழுப்புகளை கரைக்க கொள்ளு உதவி செய்கிறது. கொள்ளு உடலுக்கு பல நன்மையை வழங்கினாலும், அது அதிக சூட்டினை ஏற்படுத்தும் என்பதால் அளவோடு உபயோகம் செய்ய வேண்டும். இன்று கொள்ளு மசாலா செய்வது எப்படி என காணலாம்.
தேவையான பொருட்கள்:
கொள்ளு - 1 கிண்ணம்,
பெரிய வெங்காயம், தக்காளி - தலா 1,
பச்சை மிளகாய் - 2,
இஞ்சி-பூண்டு விழுது - சிறிதளவு,
மல்லி தூள், மல்லித்தூள் - தலா ஒரு கரண்டி,
மிளகாய்தூள், கரம் மசாலா - தலா அரை கரண்டி,
உப்பு - தேவையான அளவு,
கொத்தமல்லி தழை - சிறிதளவு.
செய்முறை:
முதலில் எடுத்துக்கொண்ட கொள்ளுவினை நன்கு வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை பொடிப்படியாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
கடாயினை அடுப்பில் வைத்து கடுகு, கறிவேப்பில்லை, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்ந்து வதக்க வேண்டும். வெங்காயம், தக்காளி நன்கு வதங்கியதும், இஞ்சி பூண்டு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து வதக்கி நீர் சேர்த்து கொதிக்க விடவேண்டும். இறுதியாக தேவையான அளவு உப்பு சேர்த்து, கொள்ளுவை மசித்து மாஷாவுடன் சேர்த்து கிளறி அல்லது தனித்தனியே வைத்து சாப்பிடலாம்.